Jan 23, 2011

தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி!!!


வெளிவந்தவுடன் சமுதாய, அரசியல் ரீதியிலான பிரச்சனைகளையும் நாம் கையில் எடுத்தாக வேண்டும் என்ற நம்முடைய வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்கானது. பற்பல ஊர்களில் பற்பல அமர்வுகள்!
சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுப்பது காலத்தின் கட்டாயம், ஒட்டுமொத்த தமிழகத்தில் அரசியல் ரீதியிலான பிரச்சனைகளில் முஸ்லிம்களுக்கு ஒரு வெற்றிடம் உள்ளது; அதை நம்மைத் தவிர வேறு யாரும் நிரப்ப முடியாது என்று விளக்கி, அதற்குக் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இன்னின்ன ஆதாரங்கள் என்று சமர்ப்பணம் செய்தோம்.

ஒவ்வொரு அமர்விலும் ஆமாம், ஆமாம் என்று தலையாட்டி விட்டு, அமர்விலிருந்து அப்பால் சென்றதும் சறுகி விடுவதே அந்த இயக்கத் தலைவரின் வாடிக்கையாக இருந்தது.

இவர்கள் அழைப்புப் பணி செய்வது அரபு நாட்டுச் சம்பளத்திற்கு செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்குத் தான்!

'சமுதாயப் பிரச்சனைகளில் தலையிட்டால் உளவுத் துறையின் ஆந்தைப் பார்வைக்கு ஆளாக நேரிட்டு அபாயத்தில் சிக்கிக் கொள்ள வேண்டும்! அது நம்முடைய அரபக வருவாய்க்கு ஆப்பு வைத்து விடும். அதனால் நமக்கு ஏன் இந்த வம்பு?''

இது தான் இவர்களின் செயல்பாடுகளிலிருந்து முடிவாக நாம் கண்டதும், கவனித்ததும் ஆகும்.

அதனால் ஆன்மீகத்தை மட்டும் வைத்துக் காலத்தைத் தள்ளுவோம் என்பது தான் அவரது கணக்கு!

சத்தியப் பணிக்கு ஓரமைப்பு

சமுதாயப் பணிக்கு ஓரமைப்பு

உலகாதாயத்தை மட்டும் லட்சியமாகக் கொண்ட இவர்களிடம் மறுமை லாபத்தை எதிர்பார்ப்பது இலவு காத்த கிளி கதை தான் என்றெண்ணி, சமுதாயப் பாதைக்கு ஓர் அமைப்பு, சத்தியப் பாதைக்கு அதாவது ஏகத்துவ அழைப்புப் பணிக்கு ஓர் அமைப்பு என்று கண்டோம்.

சமுதாயப் பணிக்காகக் கண்ட இயக்கம் காலப் போக்கில் தவ்ஹீதுப் பணியை ஜீரணிக்கவில்லை.

சத்தியத்திற்குக் கிடைத்த கிரெடிட்டை, பலனை மட்டும் அனுபவித்து விட்டு, சாறை உறிஞ்சி விட்டு நம்மை சக்கையாக வெளியே தள்ளியது. முகத்துக்கு நேராகப் புகழ்ந்து தள்ளிய அந்த முனாஃபிக்குகள் முதுகில் குத்தினார்கள்.
ஏகத்துவம் எனும் வட்டத்திற்குள் நாங்கள் வர மாட்டோம்; நாங்கள் வகுக்கும் வட்டத்திற்குள் தான் ஏகத்துவம் வர வேண்டும் என்ற நிலைபாட்டை நிறுவினர்.

இனி ஈரமைப்பில்லை! ஓரமைப்பு தான்!

இது தான் நம்மைச் சிந்திக்க வைத்தது. சத்தியத்திற்கென்று ஒரு அமைப்பைக் கண்டோம். அதில் மதனிகள் சம்பளத்தைக் கவனத்தில் கொண்டு சமுதாயப் பிரச்சனைகளை மறுத்தார்கள்.
சமுதாயத்துக்கென்று ஒரு அமைப்பைக் கண்டோம். அவர்கள் சத்தியத்திற்குக் கதவைச் சாத்துகிறார்கள். இனி மேல் நமக்கு முன் இருப்பது, சத்தியத்திற்கு ஓரமைப்பு, சமுதாயத்திற்கு வேறமைப்பு என்ற அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதி விட்டு, இரண்டிற்கும் ஒரே அமைப்பு என்ற புதிய அத்தியாயத்தைத் துவங்க வேண்டியத தான் என்று முடிவெடுத்தோம்.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அது தான் இன்று நம்மை அரவணைத்துக் கொண்டிருக்கின்ற ஓர் இயக்கம். அந்தப் பேரியக்கம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

இப்போது சத்தியம், சமுதாயம் என்ற இரு சக்கரங்களுடன் இந்த இயக்கம் தமிழகத்தில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த வேளையில் ஒரு வேதனையையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

சமுதாயப் பிரச்சனையை நாங்கள் கையில் எடுக்க மாட்டோம் என்று கூறிய அந்த இயக்கமும், ஏகத்துவம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் என்று நம்மை வெளியே அனுப்பிய பங்காளி இயக்கமும் நாம் வெளியே வந்த பிறகு, பக்காவாகக் கூட்டாளிகளாகிக் கொண்டன. எதற்கு? நம்மை எதிர்ப்பதற்கு!

அத்தனையையும் தாண்டித் தான் அல்லாஹ்வின் மகத்தான கருணையால் சத்தியப் பணிகளையும் சமுதாயப் பணிகளையும் ஒருங்கே செய்து தவ்ஹீது ஜமாஅத் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது

சத்திய, சமுதாயப் பாதைகளில் நாம் கண்ட சாதனைகளை இங்கே நாம் காணவிருக்கின்றோம்.

முதலில் சத்தியப் பாதையில் நாம் கண்ட சாதனைகளைப் பார்ப்போம்.

சாதனைகள் என்று நாம் குறிப்பிடும் போது இந்தச் சாதனைகள் 1980களுக்குப் பிந்தைய காலத்திலிருந்தே துவங்குகின்றன. இயக்கங்கள் பலவாக இருந்தாலும், அன்றிலிருந்து இன்று வரை எடுத்து வைக்கும் கொள்கை ஒன்று தான். அந்தக் கொள்கையைத் தடம் புரளாமல் எடுத்துச் சொல்லும் ஆட்களும் அதே ஆட்கள் தான். அதனால் 80களிலிருந்தே இந்தச் சாதனைப் பட்டியலைத் தொடங்குவதற்கு நமக்கு எல்லா வகையான தார்மீக உரிமையும் உள்ளது என்ற விளக்கத்தைத் தெரிந்து கொண்டு இந்த சாதனைப் பட்டியலைப் பார்வையிடச் செல்வோம்.

தலைகீழாகக் கிடந்த ஷரீஅத் வரைபடம்

1980க்கு முன்பு தமிழகத்தில் தவ்ஹீது என்ற வார்த்தை கூட அறிமுகமாகி இருக்கவில்லை. ஆனால் ஆலிம்களிடம் அறிமுகமாகி இருந்தது. இன்றைக்கு நாம் விளங்கி வைத்திருக்கும் அர்த்தத்தில் அல்ல! 'இறந்து விட்ட எந்தப் பெரியாரிடமும் உதவி தேடக் கூடாது; அவர்கள் ஒரு போதும் செவியேற்க மாட்டார்கள்; அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும்' என்று நாம் இன்று விளங்கி வைத்திருக்கும் அர்த்தத்தில் அன்று இந்த வார்த்தை அறிமுகமாகவில்லை. இறந்து விட்ட பெரியார்களிடமும் பிரார்த்திக்கலாம், அதுவும் தவ்ஹீதில் உள்ளது தான் என்று விளங்கி வைத்திருந்தோம்.

84, 85 கால கட்டத்தில் சங்கரன்பந்தலில் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருந்த போது அந்த மதரஸாவுக்கு அரபகத்திலிருந்து ஒரு நூல் தொகுப்பு வந்து இறங்கியது. ஒன்பது அல்லது பத்து பாகங்கள் கொண்ட இந்தத் தொகுப்பு புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களுக்குரிய அட்டவணையாகும்.

இந்நூற்களில் இடம் பெற்றுள்ள ஓர் அரபி வார்த்தை தெரிந்திருந்தால் போதும்! அந்த வார்த்தை இந்த  நூற்களில் எந்தப் பாடத்தில், எந்தப் பாகத்தில், எந்தப் பக்கத்தில், எத்தனை இடங்களில் பதிவாகியுள்ளது என்று அந்த அட்டவணை துல்லியமாகச் சொல்லி விடும்.

கம்ப்யூட்டர் இல்லாத காலத்தில் அந்த அட்டவணை நூல் ஒரு புதிய புரட்சிப் படைப்பு தான். இத்தனைக்கும் அந்த நூலின் ஆசிரியர் ஒரு யூதர்.

கற்ற இஸ்லாம் ஒன்று!

கண்ட இஸ்லாம் வேறு!

அந்த அட்டவணையில் ஒரு சோதனை முயற்சியாக கப்ர் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டு அட்டவணை காட்டும் பாகம், பக்கத்தில் தேடினோம்.

பாகம், பக்கமெல்லாம் சரியாக இருந்தது.

ஆனால் எங்கள் பார்வைக்குக் கிடைத்த கப்ர் தொடர்பான ஹதீஸ்கள் எங்களை அதிர்ச்சியில் உறைய வைத்தன.

படிக்கும் காலத்தில் பார்வைக்குத் தட்டுப்படாத ஹதீஸ்கள்... பல ஆயிரம் வோல்ட்டேஜ் மின்சாரம் தாக்கிய உணர்வை அடைந்தோம்.

அதுவும் அந்த ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில்!

இவை நமக்குத் தெரியாமல் ஆகி விட்டனவே என்று அதிர்ந்தோம். புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களிலும் யூதர்களின் கைவரிசை நுழைந்து விட்டதா? என்றெல்லாம் ஐயப்பாடு எழுந்தது.

ஒருவாறாக உறைவிலிருந்து ஒரு சுய உணர்விக்கு வந்தோம். அப்போது எங்களுக்குத் தெரிந்த உண்மை, மார்க்கம் தூய்மையான வடிவில் தரப்படவில்லை என்பது தான்.

கலப்பற்ற மார்க்கம் கலப்படமாகி உள்ளது. ஷரீஅத்தின் வரைபடம் தலைகீழாக மாறிக் கிடக்கின்றது.
இந்த நிலையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்பட்டது.

அப்போதிருந்து சத்தியப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தலை கீழாகக் கிடக்கும் ஷரீஅத் வரைபடத்தை, தலை மேலாக மாட்ட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினோம். இன்றும் அந்தப் பயணத்தில் தொடர்ந்து செல்கிறோம்.

மார்க்கத்தை அதன் தூய வடிவத்தில் எப்படியெல்லாம் அமல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தர்ஹாக்கள் - சாபத்திற்குரிய தலங்கள்

உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்கüடம் அதைப் பற்றிக் கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், '(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்கüடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம் மறுமை நாüல் அல்லாஹ்விடம் மக்கüலேயே மிக மோசமானவர்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 427

கப்ருகள் அருகில் தொழத் தடை

நீங்கள் கப்ருகள் மீது அமராதீர்கள். கப்ருகளை நோக்கித் தொழாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமர்ஸத் அல்ஃகனவீ  நூல்: முஸ்லிம் 1613

கப்ருகளைக் கட்டாதீர்

கப்ரு பூசப்படுவதையும் அதன் மீது அமர்வதையும் அதைக் கட்டுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 1610

கப்ருகள் பூசப்படுவதையும், அதன் மீது எழுதப்படுவதையும், அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அதை மிதிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: திர்மிதீ 972

தரைமட்டமாக்கப்பட வேண்டிய தர்ஹாக்கள்

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ நூல்: முஸ்லிம் 1609

எங்களை அன்று அதிர்ச்சியில் உறைய வைத்த ஹதீஸ்கள் இவை தான்! இவை அன்றைய தினம் எங்களுக்குத் தெரியாதவை. அந்த அளவுக்கு ஹதீஸ்கள் மறைக்கப்பட்டு இருந்தன. இந்த ஹதீஸ்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து இதன் படி மக்களை இன்று செயல்பட வைத்திருக்கின்றோம், அல்ஹம்துலில்லாஹ்!

கப்ருகள், விண்ணைத் தொடும் மினாராக்களுடன் கட்டப்பட்ட தர்ஹாக்கள் தகர்க்கப்படவும், தரை மட்டமாக்கப்படவும் வேண்டிய பணியை மட்டும் நம்மால் செய்ய முடியவில்லை. காரணம், இது ஆட்சியாளர்களால் செய்யப்பட வேண்டியதாகும். எல்லோரும் மொத்தமாக ஏகத்துவத்தில் இணைந்த சகோதரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கப்ருகளைத் தரை மட்டமாக்கிய வரலாறும் உண்டு.

ஆனால் அதே சமயம் தர்ஹாக்களே கதி என்று குடியிருந்தவர்கள் எல்லாம் தவ்ஹீதே கதி என்றாகி விட்டனர். குறிப்பாகப் பெண்களிடம் இத்தகைய மாற்றம் ஏற்பட்டது அல்லாஹ்வின் மகத்தான கருணையாகும்.

பெண்கள் தான் அதிகமாக தர்ஹா வழிபாட்டில் மூழ்கிக் கிடந்தவர்கள். அவர்கள் இன்று தவ்ஹீதைத் தங்கள் உள்ளங்களில் ஏந்திக் கொண்டு தவ்ஹீதுக் கூட்டங்களில் தேனீக்கள் போன்று மொய்க்கும் காட்சி தமிழகம் காணாத வரலாற்றுப் புரட்சியாகும்.

தலாக் - நடைமுறைக்கு வந்த நபிவழிச் சட்டம்

மனைவி மீது ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு ஒருவர் ஒரே மூச்சில் முத்தலாக் சொல்லி விட்டால், அவள் ஒரேயடியாக விவாகரத்தாகி விடுவாள். இனி அவளை இன்னொருவர் மணமுடித்து, விவாகரத்துச் செய்த பின்னர் தான் முதல் கணவர் திருமணம் முடிக்க வேண்டும்.

இது மத்ஹபுகள் கூறும் முத்தலாக் முறையாகும்.

காலங்காலமாக பல நூற்றாண்டு காலமாக மக்களிடமிருந்த இந்த மத்ஹப் தலாக் முறையை மயானத்திற்கு அனுப்பி விட்டு, குர்ஆன் கூறும் தலாக்கை மக்களிடம் நிலை நாட்டினோம்.

இதனால் கசங்கிப் போகவிருந்த மங்கையர் மறுவாழ்வு பெற்றனர். கருகிப் போகவிருந்த அவர்களது வாழ்வு மறுமலர்ச்சி பெற்றது. இங்கே மார்க்க அடிப்படையிலான தலாக்கை சுருக்கமாக உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இது தான் தலாக் கூறுவதற்கு இஸ்லாம் காட்டும் நெறியாகும்.

விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம்.அல்குர்ஆன் 2:229

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு தடவை என்பது திரும்பப் பெறுவதற்குரிய இரண்டு தலாக்குகள் ஆகும். அதாவது இவ்விரு தலாக்குகளுக்குப் பிறகு மூன்றாவது முறை தலாக் விட்டால் அவர் தனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ள முடியாது. எனவே இத்தலாக் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ வேண்டும் என்பதை இந்த வசனம் விளக்குகிறது.

தடவை என்பதன் பொருளைத் தவறாக விளங்கிக் கொண்டதால் ஒருவன் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அவன் மூன்று வாய்ப்புக்களையும் பயன்படுத்தி விட்டான், அவன் மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விட்டான் என்று மத்ஹபுகளில் சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இரண்டு தலாக்குகள் என்று கூறவில்லை. மாறாக தலாக் என்பது இரண்டு தடவைகள் என்று கூறுகின்றான். குறிப்பிட்ட காலக் கெடு முடிவடையாத வரை ஒரு தடவை என்பது பூர்த்தியாகாது.

ஒருவர் தன் மனைவியை நோக்கி ஒரே சமயததில், உன்னை மூன்று முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் முன்னூறு முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் அவர் ஒரு தடவை தலாக் கூறியதாகத் தான் பொருள்.

தடவை என்பதன் பொருளை விளங்கிக் கொள்ள சில உதாரணங்களைக் கூறலாம்.

ஒருவர் ஒரு மணி நேரம் குளித்துக் கொண்டேயிருக்கின்றார். அதன் பிறகு அவர் தலையைத் துவட்டிக் கொள்கிறார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் நாம் ஒரு தடவை என்று தான் கூறுவோம்.

இன்னொருவர் பத்து நிமிடம் குளிக்கின்றார். பிறகு வெளியே வந்து தலையைத் துவட்டிக் கொள்கிறார். மீண்டும் போய்க் குளிக்கின்றார். இப்படியே ஒரு மணி நேரத்தில் 5 தடவை இது போன்று செய்கின்றார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் 5 தடவை என்று கூறுவோம்.

ஒருவர் சாப்பிடுவதற்கு அமர்ந்து 10 இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். இவர் ஒரு தடவை சாப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் அமர்ந்து இரண்டு இட்லி சாப்பிடுகின்றார். இவர் முன்னவரை விடக் குறைவாகச் சாப்பிட்டிருந்தாலும் இரண்டு தடவை சாப்பிட்டார் என்று தான் கூறுவோம்.

இதை இங்கு குறிப்பிடக் காரணம் ஒரு தடவை என்றால் அதற்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும்.

இது போலத் தான் தலாக்கின் தடவை என்பதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தலாக் விட்டால் மூன்று மாத விடாய்க்குள்ளாக மீட்டி விட்டால் ஒரு தடவை தலாக் நிறைவேறி விட்டதாகப் பொருள். ஒரு தலாக் கூறி விட்டு, உரிய காலக் கெடுவுக்குள் மீட்டாமல் ஒருவர் ஆயிரம் முறை தலாக் என்று கூறினாலும் அது ஒரு தலாக் தான். ஏனென்றால் ஒரு தடவை என்பது இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அதை எத்தனை முறை கூறினாலும் ஒரு தடவை தான்.

இது தான் மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் இடம் பெறும் தடவை என்பதன் பொருள்.

இதை வெறும் அறிவுப்பூர்வமாக நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தின் நடைமுறையை ஆராய்ந்து தான் கூறுகின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தது என்னவெனில், ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் ஒருவன் தலாக் கூறத் தனக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று வாய்ப்புக்களில் ஒரு வாய்ப்பைத் தான் பயன்படுத்தியிருக்கிறான் என்பது தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 2689

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் மூன்று ஆண்டு காலத்திலும் மூன்று (தலாக் என்பது) ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று அபுஸ்ஸஹ்பா என்பவர் இப்னு அப்பாஸிடம் கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: தாவூஸ்நூல்: முஸ்லிம் 2690, 2691

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டிய ஷரீஅத் வரைபடத்தில், முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்துள்ளது.

இதற்கு மாற்றமாக மத்ஹபுகள் கொண்டு வந்த முத்தலாக் முறையை மாற்றி, ஷரீஅத் சட்டத்தை அல்லாஹ்வின் தூதர் காட்டிய முறையில் நடைமுறைப்படுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்தின் மாபெரும் சாதனையாகும்.

மஸ்ஜிதுக்கு வரும் மகளிர்

'தொழுகையை நீட்டித் தொழ வேண்டும் என்று எண்ணி தொழுகையில் நான் நிற்கின்றேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலைச் செவிமடுக்கின்றேன். அக்குழந்தையின் தாயை நான் சங்கடப்படுத்துவதை வெறுத்து, உடனே எனது தொழுகையை சுருக்கி விடுகின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)  நூல்: புகாரி 868, 707

வல் முர்ஸலாத்தி உர்பன் என்ற 77வது அத்தியாயத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதும் போது செவிமடுத்த உம்முல் பழ்லு (ரலி) அவர்கள், 'என்னருமை மகனே! இந்த சூராவை ஓதி எனக்கு (பழைய) நினைவை ஏற்படுத்தி விட்டாய். இதுதான் அல்லாஹ்வின் திருத்தூதர் மக்ரிபில் ஓதும்போது நான் செவிமடுத்த கடைசி அத்தியாயமாகும்'' என்று கூறினார்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 763, திர்மிதி 283

'(தொழுகையில் இமாம் தவறிழைத்தால்) சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது ஆண்களுக்கு உரியதாகும். கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1203, திர்மிதி 337

நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன்  பெண்கள் எழுந்து விடுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) நூல்: புகாரி 837, 866, 875

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுது முடிந்தவுடன் பெண்கள் போர்வையால் போர்த்திக் கொண்டு வீடுகளுக்கு புறப்படுவார்கள். இருட்டின் காரணத்தினால் அவர்கள் யாரென அறியப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 867, 372, 578, 872

நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர் என உமர் (ரலி) அவர்கள் கூறியதும் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். 'இப்பூமியில் வசிப்பவர்கள் உங்களைத் தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர்பார்த்திருக்கவில்லை'' என்றார்கள். அந்த நாட்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாவை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுது வந்தனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 864, 866, 569, 862

'உங்களில் ஒருத்தி பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது'' என்று எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜைனப் (ரலி) நூல்: முஸ்லிம் 674

'உங்களுடைய மனைவிமார்கள் (தொழுவதற்காக) பள்ளிவாசலுக்குச் செல்ல  உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களைத் தடுக்காதீர்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றேன் என் இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது மகனுக்கு) கூறினார்கள். (அதற்கு அவருடைய மகன்) பிலால் பின் அப்தில்லாஹ், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்களைத் தடுப்பேன்'' என்று கூறினார். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரை முன்னோக்கி மிக மோசமாகத் திட்டினார்கள். அது போன்று திட்டியதை நான் ஒருபோதும் கேட்டதில்லை. பிறகு 'நான் நபியவர்களிடமிருந்து உனக்கு அறிவிக்கின்றேன். நீயோ அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தடுப்பேன் என்று கூறுகின்றாய்'' என்று கூறினார்கள்'  அறிவிப்பவர்: ஸாலிம் பின் அப்தில்லாஹ் நூல்: முஸ்லிம் 666

இப்னு உமர் (ரலி) அவர்கள், 'இரவில் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்'' என்று சொன்னதும் இப்னு உமர் (ரலி) அவர்களின் மகனார், 'பெண்களை வர விட மாட்டோம் இதை (அப்பெண்கள்) குழப்பம் ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பாக ஆக்கிக் கொள்வார்கள்'' என்று பதில்சொன்னார். உடனே அவரைக் கடுமையாக வெறுத்தார்கள். 'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்கிறேன்.  நீ வர விட மாட்டேன் என்கிறாயா?'' என்றும் தன் மகனை நோக்கிக் கூறினார்கள்.அறிவிப்பவர்: முஜாஹித் நூல்: முஸ்லிம் 670

அடுக்கடுக்காகத் தொடுக்கப் பட்டிருக்கும் இந்த ஹதீஸ்களெல்லாம் மகளிருக்கும் மஸ்ஜிதுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன.

ஷரீஅத் வரைபடத்தில் உள்ள இந்தச் சட்டப் பகுதி சமுதாயத்தில் நடைமுறையில் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பெண்கள் அறவே அனுமதிக்கப் படுவதில்லை. விதிவிலக்காக எங்காவது ஒரு சில பள்ளிகளில் ரமளானில், அதுவும் தனியாக ஜமாஅத் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கலாம். இது தவிர ஏனைய அனைத்துப் பள்ளிகளிலும் பெண்களுக்குக் கதவு சாத்தப்பட்டுத் தான் உள்ளன.

'பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்யாதீர்கள். அவர்களது வீடுகளில் தொழுவது அவர்களுக்குச் சிறந்தது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: அபூதாவூத் 480

இந்த ஹதீஸைத் தங்கள் நிலைபாட்டிற்கு ஆதாரமாகக் காட்டி பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கின்றனர். சிறந்தது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், பெண்கள் வந்தால் தடை செய்யக் கூடாது என்று கூறியிருப்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

பெண்களுக்கான இந்த வாசல் அடைக்கப்பட்டதால் தான் அவர்கள் தர்ஹாக்களின் பக்கம் சென்றனர். இந்த நிலையை மாற்றி அல்லாஹ்வின் அருளால் இன்று பெண்கள் பள்ளிவாசலுக்கு வரும் நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியுள்ளது. தலைகீழாகிக் கிடந்த ஷரீஅத் வரைபடத்தை நேராக்கியுள்ளது.

திடலுக்கு வந்த  பெருநாள் தொழுகை

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாüலும் ஹஜ்ஜுப் பெருநாளும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 956

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான  ஹதீஸும் இல்லை.

'மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட எனது இந்தப் பள்üயில் (மஸ்ஜிதுத் நபவீ) தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1190

இந்த ஹதீஸின் அடிப்படையில் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவது மற்ற சாதாரண பள்üகüல் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும். பெருநாள் தொழுகைகளை பள்üயில் தொழுவது சரியான நடைமுறையாக இருந்திருந்தால் ஆயிரம் மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயத்தில் நன்மைகள் அதிகமோ அதைத் தான் நடைமுறைப்படுத்துவார்கள். அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளை திடலில் தொழுதிருக்கும் போது, அதைப் புறக்கணித்து விட்டு பள்ளியிலேயே தொழுவது நபிவழிக்கு மாற்றமானது ஆகும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களைத் தவிர பெரும்பாலான பகுதிகüல் திடலில் தொழும் நடைமுறை இல்லை. பள்ளிவாசலிலேயே பெருநாள் தொழுகையைத் தொழுது வருகிறார்கள். இவ்வாறு பள்ளிவாசலில் தொழும்போது மாதவிடாய்ப் பெண்களுக்கு பெருநாள் சந்தோஷங்கüல் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதன் மூலம் அவர்களுடைய உரிமையை நாம் மறுப்பதோடு பரக்கத்தும் புனிதமும் மிக்க அந்த நாüல் அவர்கள் (குத்பா) உரையைக் கேட்பது, தக்பீர் கூறுவது, துஆச் செய்வது போன்ற நற்செயல்கüல் ஈடுபடுவதை விட்டும் தடுத்தவர்களாகி விடுகிறோம். அதிலும் குறிப்பாக ஹனபி மத்ஹப் பகுதிகளில் பெண்களுக்கு சுத்தமாக பெருநாள் தொழுகையே கிடையாது.
ஷாபி மத்ஹப் பகுதிகளில் பெண்கள் தனி ஜமாஅத்தாகத் தொழும் வழக்கம் உள்ளது. ஹனபி மத்ஹப் பகுதிகளில் இந்த வாய்ப்பு பெண்களுக்கு முற்றிலும் மறுக்கப்படுகிறது.

இந்தக் கலாச்சாரத்தைத் தகர்த்தெறிந்து ஹனபி, ஷாபி மத்ஹப் பகுதிகளில் ஆண்களும், பெண்களும் பெருநாள் தொழுகையில் பங்கேற்கும் வகையில் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுவது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகம் இதுவரை காணாத மற்றொரு வரலாற்றுப் புரட்சியாகும்.

ஏழு தக்பீர்கள்  அறிமுகமும், அமலாக்கமும்

நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்றால், அதற்கு நேர் மாற்றமாக நின்று செயல்படும் மத்ஹப் ஹனபி மத்ஹபாகும். அந்த மத்ஹபுக்காரர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் மூன்று தக்பீர்களும், அடுத்த ரக்அத்தில் மூன்று தக்பீர்களும் ஆக 3+3 ஆறு தக்பீர்கள் மட்டுமே அதிகமாகச் சொல்லும் முறையை இதுவரை காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்த நடைமுறையை மாற்றி நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த 7+5 தக்பீர்கள் கூடுதலாகச் சொல்லும் வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத் அமலாக்கம் செய்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்கள்: திர்மிதி 492, அபூதாவூத்

ஜனாஸா தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகையை நிறைவேற்றினேன். அப்போது அவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு, 'நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)'' என்றார். அறிவிப்பவர்: தல்ஹாநூல்: புகாரீ 1335

இது தான் ஷரீஅத் வரைபடத்தில் உள்ள வரைகோடாகும். நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைக்கு நேர்முரணாக ஹனபி மத்ஹபில் ஜனாஸா தொழுகையில் 'ஸனா'வை மட்டும் ஓதும் வழக்கம் உள்ளது.

இதை மாற்றி ஷரீஅத் வரைபடத்தில் உள்ளபடி ஜனாஸா தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதும் நபிவழியை தவ்ஹீத் ஜமாஅத் நடைமுறைப்படுத்தியது.

ஒரு பாங்கு தான்!     இரண்டு பாங்கில்லை!

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை பெற்று விட்டது. அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி) நூல்: புகாரீ 916

ஜுமுஆ அன்று ஒரு பாங்கு சொல்வது தான் நபிவழியில் உள்ளது. இதற்கு மாற்றமாக தமிழகத்தில் இரண்டு பாங்கு சொல்லும் நடைமுறை உள்ளது.

ஷரீஅத் வரைபடத்திலுள்ளது ஒரு பாங்கு தான் என்பதைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது தவ்ஹீது ஜமாஅத்.

சப்தமின்றி திக்ரு செய்தல்

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! அல்குர்ஆன் 7:205

திக்ரு செய்வதில் திருக்குர்ஆன் கூறும் வழிமுறை இது தான். அது போன்று நபவழியில் காணும் நடைமுறையும் இது தான்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, 'லா இலாஹ இல்லல்லாஹ் லிவணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை'' என்றும், 'அல்லாஹு அக்பர் லி அல்லாஹ் மிகப் பெரியவன்'' என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், 'மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில்,  நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. அவன்உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகில் இருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூசா அஷ்அரீ (ரலி)நூல்: புகாரி 2992

குர்ஆன், ஹதீஸின் இந்த வழிகாட்டுதலுக்கு மாற்றமாக, பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் சப்தமிட்டு திக்ரு செய்வது இதுவரை நடந்தேறும் வரம்பு மீறல்களாகும்.

இந்த வரம்பு மீறலை மாற்றி, வரைபடத்தில் உள்ளதைப் போல் மனதிற்குள் திக்ர் செய்யும் வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம் செய்தது.

சத்தியப் பாதையில் தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்த்திய சாதனைகள் இவை மட்டுமல்ல! இன்னும் ஏராளம் உள்ளன.

ஸஹர் பாங்கு அறிமுகம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்கüல் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகவும், உங்கüல் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற் காகவும் தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல்: புகாரி 621

இது ஷரீஅத் வரைபடத்தில் உள்ள வணக்க வழிபாடாகும். ஆனால் இந்த வழிபாடு சமுதாயத்தில் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத் தான் தமிழக இஸ்லாமிய வரலாற்றிலேயே பள்ளிவாசல்களில் ஸஹர் பாங்கை அறிமுகப்படுத்தி, ரமளான் மாதத்தை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் உள்ளது போன்று உயிர்ப்பித்துக் கொண்டு இருக்கிறது.

எட்டுத் திக்கும் எட்டு ரக்அத் இரவுத் தொழுகை

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களிடம், 'ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழ மாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்'' என்றுவிடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர் ரஹ்மான்  நூல்: புகாரி 1147

இது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இரவுத் தொழுகை. ரமளானிலும், ரமளான் அல்லாத காலங்களிலும் நபி (ஸல்) அவர்கள் 8+3 ரக்அத் இரவுத் தொழுகை தொழுதுள்ளார்கள். சில ஹதீஸ்களில் வித்ருடன் சேர்த்து 13 ரக்அத் தொழுததாகவும் இடம் பெற்றுள்ளது.

இது தான் ஷரீஅத் வரைபடத்தின் சரியான வடிவம். ஆனால் இது தலைகீழாக மாற்றப்பட்டு 20+3 ரக்அத்துகள் தொழும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது.

தராவீஹ் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த பித்அத்தை மாற்றி நபிவழியை நடைமுறைப் படுத்த தவ்ஹீது ஜமாஅத் முயன்ற போது சந்தித்த எதிர்ப்பைப் போன்று வேறு எதற்கும் எதிர்ப்பைச் சந்தித்திருக்காது. அந்த அளவுக்கு, எட்டு ரக்அத் இரவுத் தொழுகை என்று அறிவித்ததும் தமிழகமே அமர்க்களப்பட்டது; ஆர்ப்பாட்டம் அடைந்தது. இந்த அமர்க்களம், ஆர்ப்பாட்டம் எப்போது அடங்கியது? 8+3 ரக்அத்களை தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுத்திக் காட்டிய பிறகு தான் அடங்கியது.

இருபது ரக்அத் தொழுவோரிடம் காணப்படுகின்ற அவசரம், எட்டு ரக்அத் தொழுவோரிடம் இல்லை. இருபது  ரக்அத்களும் அரை மணி நேரத்தில் முடிகின்றது என்றால் எட்டு ரக்அத் தொழுவதற்கு ஒரு மணி நேரத்தைத் தாண்டுகிறது. அவ்வளவு அமைதி! அந்த அளவுக்கு நிதானம்!

அவசர கதியில் குர்ஆனை ஓதி முடிக்காமல் நிறுத்தி, நிதானமாக கிராஅத் ஓதப்படுகின்றது. நிலையில், ருகூவில், ஸஜ்தாவில் நிறுத்தி நிதானமாகத் தொழும் இந்த இரவுத் தொழுகையில் கலந்து கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அப்படியொரு மாற்றத்தை, மறுமலர்ச்சியை, வணக்க வழிபாட்டுப் புரட்சியை தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் ஏற்படுத்தியது.

பத்து இரவுகளும் பட்டப்பகலான அதிசயம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2017

அல்லாஹ்வின் தூதரின் இந்த உத்தரவு ஷரீஅத் வரைபடத்தின் சட்ட வடிவமாகும். ஆனால் இதற்கு மாற்றமாக 27ம் இரவில் மட்டும் அதுவும் முன்னேரத்தில் மக்கள் கூடி விட்டு, புரோட்டா கறி, பிரியாணிப் பொட்டலம், சேமியா பாயாசம் சகிதத்துடன் கலைந்து விடும் வழக்கம் இருந்து வந்தது. ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரை அடையும் விஷயத்தில் மக்களிடம் இருந்த அலட்சியப் போக்கை மாற்றி, ஒரு சரித்திர மாற்றத்தைக் கொண்டு வந்தது தவ்ஹீது ஜமாஅத்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுக்கும் விதமாக, ரமளானின் பிந்திய பத்து இரவுகளும் பட்டப் பகலானது. தவ்ஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாசல்களில் இந்த நாட்களில் பின்னிரவு நேரத்தில் இரவுத் தொழுகை நிறைவேற்றப்படுகின்றது. மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் நள்ளிரவில் நடைபெறும் இரவுத் தொழுகையில் கலந்து கொள்வதற்கு இரவு 12 மணிக்கே பெண்கள் பள்ளிக்கு வந்து காத்துக் கிடக்கின்றனர். பிந்திய பத்தில் நடைபெறும் இந்த இரவுத் தொழுகையில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்கள் திரண்டு வருகின்றனர். ஏன்? லைலத்துல் கத்ரை, அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான நேரத்தில் தேடுகின்ற புரட்சியை தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கொண்டு வந்தது.

தவ்ஹீது பள்ளிகளில் உள்ள ரம்மியமிகு ரமளானின் பிந்திய இரவுகளின் சிறப்புகளைப் பார்த்து விட்டு, சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிகளிலும் அந்த நேரத்தில் தஹஜ்ஜத் என்று கூறி மேலதிகமாக 8 ரக்அத்கள் தொழ ஆரம்பித்துள்ளனர். அந்த அளவுக்கு மாற்றத்தை, தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது.

மக்ரிபுக்கு முன் சுன்னத்

நபி (ஸல்) அவர்கள் 'மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுங்கள்' (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும் போது அதை (எங்கே) மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு சுன்னத்தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி, 'இது விரும்பியவர்களுக்கு மட்டும் தான்'' என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி) நூல்: புகாரி 1183

ஷரீஅத்தின் வரைபடத்திலுள்ள இந்த வணக்க வழிபாடு இன்று நடைமுறையில் இல்லை. ஷாஃபி மத்ஹபிலாவது ஒரு சில இடங்களில் மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதைப் பார்க்க முடியும். ஆனால் ஹனபி மத்ஹபில் மருந்துக்குக் கூட இதைப் பார்க்க முடியாது. மக்ரிப் பாங்கு முடிந்தவுடன் இகாமத் சொல்லி தொழுகையை ஆரம்பித்து விடுவர். தொழுகை நேர அட்டவணையில் கூட 'மக்ரிப் இகாமத்' என்ற இடத்தில், 'உடன்'' என்று தான் போட்டிருப்பார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இன்று மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதை மகிழ்ச்சியுடன் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

பள்ளிவாசலில் நுழைந்தால் ஒரு காணிக்கைத் தொழுகை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் பள்üவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.  அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி) நூல்: புகாரி 444

ஷரீஅத்திலுள்ள இந்த வணக்கம் சமுதாயத்தின் செயல்பாட்டில் இல்லை. இந்த வணக்கத்தை, தவ்ஹீத் ஜமாஅத் மக்களிடம் அறிமுகப்படுத்தி, செயல்பாட்டுக்கும் கொண்டு வந்தது.

ஃபித்ரு ஸதகாவில்  ஒரு புரட்சி

பெருநாள் தர்மம் என்ற ஒன்று தமிழகத்தில் அறவே இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் அந்தந்த ஊர்களில் பள்ளிவாசலில் பணி புரியும் ஆலிம்கள், பணி புரியாத ஆலிம்கள், முஅத்தின்கள், குழி தோண்டும் பக்கீர்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கொடுப்போரும் சிலர் தான் இருந்தனர். பெறுவோரும் சிலர் தான். ஃபித்ரு ஸதகா கொடுக்கக் கடமைப்பட்ட ஆலிம்களே அதைப் பெறுபவர்களாக இருந்தது தான் வேதனைக்குரிய விஷயம்.

இப்படி அல்லறை, சில்லறையாக சிதறிச் சிதறி வழங்கப்பட்ட ஃபித்ரு ஸதகா என்ற வணக்கத்தை தமிழக முஸ்லிம்களிடம் முறையாக அறிமுகப்படுத்தி, முழுமையாகச் செயல்படுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்!

தமிழக முஸ்லிம்களிடம் கோடிக்கு மேல் ஃபித்ரு ஸதகாவைத் திரட்டி, சமுதாயத்தின் கோடியில் கிடக்கும் ஏழை எளியவர்களுக்கு வழங்கும் புரட்சி நடைமுறைக்கு வந்தது தவ்ஹீத் ஜமாஅத்தினால் தான்.

முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: புகாரி 1503

பெருநாள் இரவுகளில் கேலிக் கூத்துகளில் ஈடுபட்டுக் கொண்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருந்த இளைஞர் பட்டாளம், இன்று இந்த ஹதீஸைச் செயல்படுத்தும் விதமாக அரிசி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு, ஏழைகளின் வீடு தேடிச் சென்று வழங்கும் தூய பணியில் ஈடுபட்டுள்ள காட்சி, இது வரை தமிழகம் காணாத காட்சியும் மாட்சியுமாகும். புனித மிக்க ஒரு புரட்சியாகும்.

தற்கொலை செய்தவருக்கு தொழுவதற்குத் தடை

ஒரு மனிதர் நோயுற்ற போது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அவர் இறந்து விட்டார்'' என்று சொன்னார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், 'அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். 'நான் அவரைப் பார்த்தேன் (அவர் இறந்து விட்டார்)'' என்று அம்மனிதர் கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'அவர் இறக்கவில்லை'' என்று கூறினார்கள். பிறகு அம்மனிதர் (நோயாளியிடம்) வந்த போது, அவர் கூரிய ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அவர் இறந்து விட்டார்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?'' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், 'அவர் தன்னிடமிருந்த கூரிய ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதை நான் பார்த்தேன்'' என்று கூறினார். 'நீ பார்த்தாயா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அம்மனிதர், ஆம் என்றார்.  நபி (ஸல்) அவர்கள், 'அப்படியானால் அவருக்கு நான் தொழுவிக்க மாட்டேன்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி) நூல்: அபூதாவூத் 2770

இது தான் ஷரீஅத் சட்டம். இந்தச் சட்டத்தில் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை. ஆனால் மத்ஹபுகளில் இதற்கு மாற்றமாக, தொழுகை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஜனாஸா தொழுகை என்பது முஸ்லிம்களுக்குத் தானே தவிர, நரகம் என்று தெளிவாகி விட்டவருக்கு இல்லை. தற்கொலை செய்தவர் காஃபிராகி விடுகின்றார் என்பதைப் புகாரியில் இடம்பெறும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் இருந்தவர்கüடையே ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். (ஒரு முறை) அவர்காயமடைந்தார். அவரால் வலி பொறுக்க முடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தன் கையைத் துண்டித்துக் கொண்டார். அவர் இறக்கும் வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டேயிருந்தது. அல்லாஹ், 'என் அடியான், தன் விஷயத்தில் (அவசரப் பட்டு) என்னை முந்திக் கொண்டான். அவன் மீது நான் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டேன்'' என்று கூறினான். அறிவிப்பவர்: ஜுன்தப் (ரலி) நூல்: புகாரி 3463

இந்த அடிப்படை விபரம் கூடத் தெரியாமல் மத்ஹபுவாதிகள், தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில், தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தத் தடை என்பதை தவ்ஹீத் ஜமாஅத் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

பயனுள்ள பயணத் தொழுகை

நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாக உள்ளனர். அல்குர்ஆன் 4:101

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, 'நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ, அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத்களை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்நூல்: முஸ்லிம் 1230

பயணத்தின் போது தொழுகையைச் சுருக்கிக் கொள்ளும் வழிமுறையை அல்குர்ஆனும், ஹதீசும் நமக்குக் கற்றுத் தந்துள்ளது. ஆனால் மத்ஹபு ஆலிம்களோ, பொருத்தமில்லாத காரணங்களைக் கூறி இந்த உரிமையைத் தட்டிப் பறித்து விட்டனர். தவ்ஹீத் ஜமாஅத் தலையெடுத்த பின்னர் தான் இந்தச் சலுகை மக்களிடம் சென்றடைந்தது.

சூரியன் சாய்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும் வரை தாமதப்படுத்தி பின்னர் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். (பிரயாணத்தைத் துவங்கும் முன்) சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரைத் தொழுது விட்டுப் புறப்படுவார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரீ 1111

பயணத்தின் போது தொழுகையின் ரக்அத்களைக் குறைத்துக் கொள்வதற்குச் சலுகை வழங்கிய மார்க்கம் தான் சேர்த்துத் தொழுவதற்கும் அனுமதி அளித்திருக்கின்றது. ஆனால் இந்த ஆலிம் வர்க்கம் இந்த உரிமையை அநியாயமாகப் பறித்து விட்டது. பறிக்கப்பட்ட இந்த உரிமையை மீட்டு, ஷரீஅத்
வரைபடத்தைச் சரியாக்கி சாதனை படைத்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்!

களாத் தொழுகை

ஒருவர் பருவ வயதை அடைந்ததும் அவருக்குத் தொழுகை கடமையாகின்றது. அவர் ஐம்பது வயது வரை தொழாமல் இருந்து விட்டு, பிறகு திருந்தி தொழத் துவங்குகின்றார். இப்போது இந்த மத்ஹபுவாதிகள், இவ்வளவு காலம் தொழாமல் இருந்ததையும் சேர்த்து களாவாகத் தொழ வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதற்குப் பயந்து அவர் தொழுவதையே விட்டு விடுகின்றார். இப்படி மார்க்கத்தில் இல்லாத களா தொழுகையை மக்களிடம் திணித்துக் கொண்டிருந்தார்கள்.

'யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1217

தூக்கம், மறதி ஆகிய இரண்டிற்கு மட்டும் தான் களா உண்டு. மற்றபடி, தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று திருக்குர்ஆன் (4:103) கூறுவதை மக்களிடம் விளக்கி, களாத் தொழுகை என்ற சுமையை சமுதாயத்திலிருந்து தவ்ஹீது ஜமாஅத் அகற்றியது. வாழ் நாள் களாவுக்குப் பயந்து தொழாமலே இருந்த பலரைத் தொழுகையாளிகள் ஆக்கியது.

மாற்றப்பட்ட ஸஹர் நேரம்

வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! (அல்குர்ஆன்2:187)

சுப்ஹ் நேரம் வரும் வரை சாப்பிடலாம் என்பதை இந்த வசனம் கூறுகின்றது. இதற்கு விளக்கமாக வரும் ஹதீஸ்களும் சுப்ஹ் நேரம் வரை ஸஹர் உணவு உண்ணலாம் என்பதை வலியுறுத்துகின்றன.

பிலால் (ரலி) அவர்கள் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இப்னு உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்'' என்று கூறினார்கள். அறிவிப்போர்: ஆயிஷா (ரலி)இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1918, 1919

திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் இவ்வளவு தெளிவாக இருந்தும், ஃபஜ்ரு நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பே ஸஹர் நேரம் முடிந்து விடுவதாக பரவலான நம்பிக்கை மக்களிடம் உள்ளது.  நோன்புக் கால அட்டவணைகளை அச்சிட்டு மக்களிடம் விநியோகிப்பவர்களும் ஸஹர் முடிவு நேரம் என்று காலை 4 மணியிலிருந்து 4.30க்குள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த நிலையை மாற்றி, ஃபஜ்ருடைய பாங்கு சொல்லப்படும் வரை ஸஹர் செய்யலாம் என்ற நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த ஸஹர் நேரத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தி, அமல்படுத்தவும் செய்தது.

நோன்பு துறப்பதில் கால தாமதம்

'சூரியன் மறைந்து இந்தத் திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்தத் திசையிலிருந்து பகல் பின்னோக்கிப் போனால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: புகாரி 1954

'நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) நூல்: புகாரி 1957

சூரியன் மறைந்தவுடன் நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்பதைக் கூறும் ஹதீஸ்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்று நடைமுறையில் பேணுதல் என்ற பெயரில் சூரிய மறைவு நேரத்திலிருந்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வரை தாமதமாக நோன்பு துறக்கின்றனர்.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் இதை மாற்றியமைத்து, சூரியன் மறைந்தவுடன் நோன்பு துறக்கும் நடைமுறையை ஏற்படுத்தியது.

உச்சி வெயிலில் பெருநாள் தொழுகை

பெருநாளன்று திடலில் தொழும் போது மக்களை வெயில் தாக்கும். இதனால் அதிகாலையிலேயே பெருநாள் தொழுகையை முடித்து விட வேண்டும் என்று மார்க்கம் வழிகாட்டியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்களது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612

இந்த ஹதீஸிலும், இது போன்ற பல்வேறு ஹதீஸ்களிலும் பெருநாள் தொழுகையை காலையில் முதல் காரியமாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர், பெருநாள் தொழுகையை காலை பத்து மணி வரை தாமதமாகத் தொழுது கொண்டிருந்தனர்.

இறைவனின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத், பெருநாள் தொழுகையை அதிகாலை நேரத்தில், சூரியன் உதயமான சிறிது நேரத்திலேயே தொழுது வழிகாட்டியது. குறிப்பாக ஹஜ்ஜுப் பெருநாளன்று தொழுகை முடித்து விட்டு அறுத்துப் பலியிட வேண்டும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் இந்த நபிவழியைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

இதனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் திடலில் நடத்தும் பெருநாள் தொழுகைகளில் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. இதைக் கண்டு சுன்னத் வல் ஜமாஅத்தினரும் கூட்டத்தைத் தக்க வைப்பதற்காக அதிகாலையில் தொழ ஆரம்பித்துள்ளனர்.

இப்படி ஷரீஅத் என்ற வரைபடத்தில் உள்ள அத்தனை வழிபாடுகளையும் உள்ளதை உள்ளபடி செயல்பாட்டிற்குக் கொண்டு வந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

மார்க்கப் பிரச்சாரத்தில் ஒரு மறுமலர்ச்சி

நாம் இது வரை கண்டது, வணக்க வழிபாடுகளை குர்ஆன், ஹதீஸ்  அடிப்படையில் மாற்றியமைத்து தவ்ஹீது ஜமாஅத் கொண்டு வந்த மறுமலர்ச்சி ஆகும். தலைகீழாகக் கிடந்த ஷரீஅத் வரைபடத்தை நேராக்கிக் காட்டிய சாதனைகளில் சிலவற்றைத் தான் நாம் கண்டோம்.

இவையல்லாமல் மார்க்கச் சொற்பொழிவு ரீதியிலும் தவ்ஹீது ஜமாஅத், வல்ல இறைவனின் அருளால் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

நாதியற்றுப் போன பேச்சாளர்கள்

தமிழகத்தைச் சார்ந்த ஒவ்வொரு தவ்ஹீதுவாதியும் ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்கூடாகக் காணலாம். கடந்த காலங்களில் ஒவ்வொரு ஊரிலும் மார்க்கக் கூட்டம் நடைபெறும்.

அதிலும் குறிப்பாக நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதமென்றால் போதும்! மவ்லிதுப் பாடல்களுக்கும் மீலாது மேடைகளுக்கும் மவுசு உண்டாகி விடும். ஊருக்கு ஊர் போட்டி போட்டுக் கொண்டு மீலாது சொற்பொழிவுகளை நடத்துவார்கள்.

இம்மேடைகளில் இரண்டு ரகமான பேச்சாளர்கள் விளாசித் தள்ளுவார்கள்.

ஒரு ரகம் உலமாக்கள்! மற்றொரு ரகம், இந்த உலமாக்களின் கொச்சைப் பேச்சைக் கிண்டல் செய்து பேசும் உலகக் கல்வி கற்ற பட்டதாரிகள்; பண்டிதர்கள்! இவர்களில் அரசியல்வாதிகளும் உண்டு. அரசியலில் கலக்காதவர்களும் உண்டு.

இவ்விரு பேச்சாளர்களுமே பொய்யான ஹதீஸ்களை வைத்துப் பின்னியெடுத்து விடுவார்கள். இவ்விரு ரகத்தினருமே போட்டி போட்டுக் கொண்டு நபி (ஸல்) அவர்களைப் பற்றிப் பொய்யான செய்திகளை அவிழ்த்து விடுவார்கள்.

உலமாக்களிலும் மூன்று சாரார் உள்ளனர். ஒரு சாரார் கப்ரு வணக்கத்தை ஆதரிப்பவர்கள்; தரீக்கா மற்றும் தர்ஹாவாதிகள். ஷப்பீர் அலீ பாகவி, கலந்தர் மஸ்தான் ரஹ்மானி போன்றவர்கள் இந்தத் தரப்பில் உள்ளவர்கள்.

மற்றொரு சாரார் தப்லீக்வாதிகள். காயல்பட்டிணம் ஹைதுரூஸ் ஆலிம், நிஜாமுத்தீன் மன்பஈ, கலீல் அஹ்மது கீரனூரி போன்றவர்கள் இதில் அடக்கம்.

இந்த இரு சாராரும் ஒருவரையொருவர் காஃபிர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதிர்க் கருத்து கொண்டவர்கள். ஒருவரின் கொள்கையை மற்றவர் குஃப்ரு என்று விமர்சனம் செய்வார்கள்.

மூன்றாவது சாரார் இரண்டும் கெட்டான்கள். மறைந்த ஷம்சுல்ஹுதா, தற்போதுள்ள டி.ஜே.எம். ஸலாஹுத்தீன், கான் பாகவி போன்றவர்கள். இவர்கள் எந்தப் பக்கம் என்று சொல்ல முடியாது. தடுமாற்றத்திலும், தத்தளிப்பிலும் உள்ளவர்கள்.

ஆனால் ஓர் உண்மை! தமிழகத்தில் தவ்ஹீது கருத்து உருவானவுடன் இச்சாரார் அனைவருமே தவ்ஹீதுக்கு எதிராகக் கைகோர்த்துக் கொண்டு நம்மை எதிர்த்தனர். இப்போதும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் அவர்கள் அனைவரும் மத்ஹபுவாதிகள். அந்த அடிப்படையில் ஒன்று சேர்ந்து கொண்டு நம்மை எதிர்க்கத் துவங்கினர். விதிவிலக்காக அவர்களில் நம்மை எதிர்க்காதவர்களும் உண்டு.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஒரு காலத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களாக, நாவலர்களாக, உலமாக்களின் நாயகர்களாக வலம் வந்தவர்களில் பலர் தற்போது பேர் மட்டுமல்ல, வேரும் அறுந்து போனார்கள்.

கவ்ஸர் அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுவது போன்று சத்தியத்திற்கு எதிராகக் கிளம்பிய அவர்கள் சந்ததியற்றுப் போனார்கள்.

இன்று இவர்கள் போடும் கூட்டத்திற்குப் பொதுமக்கள் வருவதில்லை. ஒப்பு சப்புக்காகச் சிலர் வருகின்றனர். அல்லது மதரஸா மாணவர்களைக் கொண்டு இருக்கைகளை நிரப்புகின்றனர்.

மார்க்கப் பிரச்சாரத்திற்குக் கூட்டம் வரவில்லை என்பதால் சமுதாயப் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு அதற்காகக் கூட்டம் போட்டுப் பார்த்தனர். அதற்கும் மக்கள் வருவதில்லை.

இன்று மக்கள் அலையலையாக வருவது தவ்ஹீதுக் கூட்டத்திற்கு மட்டும் தான். இந்த அற்புதத்தை நமது வாழ்நாளிலேயே அல்லாஹ் நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறான்.

அது மட்டுமல்ல! ஏகத்துவப் பிரச்சார உரைகள் ஆடியோ, வீடியோ கேஸட்டுகளாகவும், குறுந்தகடுளாகவும் வெளியிடப்பட்டு, அவையும் மக்களிடம் பிரச்சாரமாகச் சென்று கொண்டிருக்கின்றன.

சினிமாப் படங்களையும், பாடல்களையும் வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், இன்று மார்க்கப் பிரச்சாரங்களைக் கேட்டு, பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவும் தவ்ஹீது ஜமாஅத் சொற்பொழிவு ரீதியில் ஏற்படுத்திய பெரும் புரட்சியாகும்.

மேலும் இந்த மார்க்கச் சொற்பொழிவுகள் தனியார் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு உலகம் முழுவதும் சென்று கொண்டிருக்கின்றது.

தொலைக்காட்சி என்றாலே அது கேளிக்கை தான் என்ற நிலையை மாற்றி, இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கும் அதைப் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்தது தவ்ஹீது ஜமாஅத்தின் சாதனையாகும்.

எடுபடாமல் போன இலக்கியப் பேச்சு

உலமாக்கள் அல்லாத சாராரில் ஆ.கா. அப்துஸ்ஸமது, அப்துல் லத்தீப், மறுமலர்ச்சி ஆசிரியர் யூசுப் ஆகியோர் அடங்குவர். ஒரு காலத்தில் இவர்களது பேச்சுக்களைக் கேட்பதற்கென்று ஒரு கூட்டம் கூடும்.

ஆனால் ஏகத்துவம் வந்த பிறகு இவர்களின் பேச்சுக்கள் எடுபடாமல் போனது. அதுவும் இவர்களது இலக்கியப் பேச்சுக்கள் மதிப்பிழந்து போனது.

காரணம் என்ன? இவர்களும் உலமாக்களுடன் சேர்ந்து கொண்டு சத்தியத்தை எதிர்த்தது தான்.

ஆதாரம் கேட்கும் அற்புதக் காலம்

எந்தப் பேச்சாளரும் எந்த மேடையிலும் எதையும் பேசி விட்டுப் போகலாம்; பொய்யான ஹதீஸ்களை மேடையில் புளுகி விட்டுப் போகலாம் என்று அந்தக் காலம் அமைந்திருந்தது.

நூர் மஸாலா என்ற பெயரில் பக்கீர்ஷாக்கள், நபிமார்கள் வரலாறு என்று கூறி ஆயிரக்கணக்கான பொய்களை அள்ளி வீசிய காலம் அது!

அந்தக் காலத்தை அப்படியே புரட்டியெடுத்து, சரியான ஹதீஸை மட்டும் பேச வைக்கும் காலத்தை உருவாக்கியது தவ்ஹீது ஜமாஅத்!

பேச்சாளர்கள் பேசி முடித்ததும், நீங்கள் பேசியதற்குக் குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் உள்ளதா? என்று ஆண்கள் மட்டுமல்ல! பெண்களும் பேச்சாளர்களைக் கடித்துக் குதறும் புரட்சியை தமிழகம் கண்டது.

மகளிர் பெற்ற மறுவாழ்வு

தமிழகத்தில் தவ்ஹீது என்ற பாக்கியம் ஆரத் தழுவிய பிறகு முஸ்லிம்கள் கண்ட பயன்கள் ஏராளம். இதில் பெண்கள் கண்ட பயன்கள் அளவிட முடியாது என்று கூறலாம். ஒரே அமர்வில் மூன்று தலாக் சொன்னால் அதை மீட்ட முடியாது என்ற மத்ஹபு வெறியைத் தகர்த்தெறிந்து, அது ஒரு தலாக் தான், அதை மீட்டிக் கொள்ள முடியும் என்று தவ்ஹீது ஜமாஅத் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இதைக் கடந்த இதழில் கண்டோம்.

முத்தலாக் விஷயத்தில் பெண்களுக்கு மறு வாழ்வு வழங்கியது போன்று மற்றொரு விஷயத்திலும் பெண்களுக்கு மிகப் பெரிய நிம்மதியை வழங்கியது. அது தான் குல்உ சட்டமாகும்.

பிடிக்காத கணவனை விட்டும் பிரிந்து கொள்வதற்காக இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய ஓர் உரிமை தான் 'குல்உ' ஆகும். இது ஷாபி மத்ஹபுச் சட்டத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தாலும் நடைமுறைக்கு வராத வறட்டுத் தத்துவமாகவே நீடிக்கின்றது. ஹனபீ மத்ஹபில் இது அறவே கிடையாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ்(ரலி)யின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்'' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி 'சரி'' என்றார். உடனே நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் 'தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு'' என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 5273, நஸயீ 3409

இந்த ஹதீஸின் அடிப்படையில் காட்டுமிராண்டித்தனமான கணவன்களிடமிருந்து பிரிந்து, தனக்கு விருப்பமான வேறு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களிடம் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதன் மூலம், பிடிக்காத கணவனிடம் அல்லது கொடுமைக்காரக் கணவனிடம் இருந்து கொண்டு கசங்கி, உருகி, கருகிப் போகும் கோர நிலையிலிருந்து பெண்களைக் காத்து, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கியது தவ்ஹீது ஜமாஅத்!

சுன்னத் வல்ஜமாஅத்தின் முக்கியப் பிரமுகர்கள் கூட, தங்களுடைய குடும்பப் பெண்களுக்கு இது போன்ற சோதனைகள் ஏற்பட்டால் மத்ஹபுச் சட்டங்களையோ அல்லது மத்ஹபு ஆலிம்களையோ நாடுவதில்லை. ஏனென்றால் தங்கள் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமையிலிருந்து அவர்களால் காப்பாற்ற முடியாது என்பதை அறிந்து, தவ்ஹீது ஜமாஅத்தைத் தான் நாடுகிறார்கள் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

புர்கா போடும் புரட்சி

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வாழும் பெண்கள் குறிப்பாக நெல்லை, குமரி மாவட்டங்களில் பிற மதத்தினரைப் போலவே சேலை, தாவணி, துப்பட்டா போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு தான் காட்சியளிப்பார்கள். மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் ஒரு விதமான கோஷா! தஞ்சையில் ஒரு விதமான கோஷா என்றாலும் அதில் கவர்ச்சிகரமான கோஷா!

மார்க்கம் கூறியபடி தங்கள் உடல் அழகை மறைக்காத நிலை தான் பெரும்பாலான முஸ்லிம் பெண்களிடம் இருந்தது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஏகத்துவப் பிரச்சாரம் வீரியமடைந்த பிறகு, பெண்கள் தங்கள் முகம், முன் கைகளைத் தவிர ஏனைய பகுதிகளை மறைக்கும் புர்கா அணியத் துவங்கினர். தவ்ஹீது ஜமாஅத் பெண்கள் மட்டுமல்லாது தற்போது பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்கா அணிகின்றனர். இது உண்மையில் ஒரு புரட்சியாகும்.

புரட்சி என்றால் ஏற்கனவே இருக்கும் ஒரு நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் மாற்றத்தையே குறிக்கும். அப்படித் தான் தவ்ஹீத் ஜமாஅத் இந்தச் சமுதாயத்தைப் புரட்டிப் போட்டது. ஒரு சில ஊர்களைத் தவிர மற்ற பகுதிகளில் ஹிஜாப் முறை நடைமுறைக்கு வராமல் இருந்தது. அதைத் தவ்ஹீது ஜமாஅத், ஷரீஅத் வரைபடத்தில் உள்ளது போன்று வாழ்க்கைப் பாடத்தில் கொண்டு வந்தது.

வரதட்சணைக் கொடுமை

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை, கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அல்குர்ஆன் 4:4

இது அல்லாஹ்வின் கட்டளை. இது தான் ஷரீஅத் வரைபடத்தில் உள்ளது. ஆனால் இவர்களோ பெண்களிடம் வாங்குகின்றனர். இலட்சக்கணக்கில் பணமாகவும், நகையாகவும், பொருட்களாகவும் வாங்கும் இந்தக் கொடுமையை எதிர்க்கக் கடமைப்பட்ட ஆலிம்கள், அதற்குப் போய் அல்ஃபாத்திஹா சொல்லி ஆசி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் ஒரு பெரும் யுத்தத்தையே அன்றிலிருந்து இன்று வரை நடத்திக் கொண்டிருக்கின்றது. அதன் பலனாக, அல்லாஹ் சொல்வது போன்று லட்சக்கணக்கில் மஹர் கொடுத்து மணம் முடிக்கும் இளைஞர்களை தவ்ஹீத் ஜமாஅத் உருவாக்கியுள்ளது. இந்தக் கருத்தை ஏற்பதற்கு முன் ஏற்கனவே வரதட்சணை வாங்கியவர்கள் கூட திருப்பிக் கொடுத்த வரலாறும் உண்டு.

தமிழகத்தில் பெரும்பான்மையான ஊர்களில் தலைப் பிரசவத்தைப் பெண் வீட்டுக்காரர்கள் தான் பார்க்க வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் அமலில் உள்ளது. பிள்ளைக்கும் தாய்க்கும் செலவளிப்பது ஆண்களின் கடமை என்ற (2:233) வசனத்தின் அடிப்படையில் தலைப் பிரசவம் மட்டுமல்லாமல் எல்லா பிரசவச் செலவையும் ஆண்களே செய்யும் நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது.

கூலி வேலை செய்யும் மாப்பிள்ளைக்கு ஒரு விலை, அரசு உத்தியோகம் பார்க்கும் மாப்பிள்ளைக்கு ஒரு விலை என்று மாட்டுச் சந்தையில் விற்பது போல் மணமகனை விற்கும் நிலை தமிழகத்தில் உள்ளது. இதையெல்லாம் உடைத்தெறிந்து, பெண்களுக்கு மனமுவந்து கொடுக்கும் மாபெரும் வரலாற்றுப் புரட்சியை தவ்ஹீத் ஜமாஅத் படைத்துள்ளது.

ஒரு காலத்தில் மார்க்கத்தின் இந்த நடைமுறைகளை வெறும் தத்துவார்த்தமாகப் பேசிய போது மக்கள் வெகுண்டு எழுந்தனர். சிலர், 'இதெல்லாம் பேசுவதற்கு நல்லாயிருக்கும், நடைமுறைக்கு சாத்தியமா?' என்று கேட்டனர். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் அவற்றைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்த போது மக்களும் பின்பற்ற முன்வருகின்றனர். உண்மையில் அல்லாஹ்வின் பேரருளால் இது தமிழகம் காண்கின்ற வரலாற்றுப் புரட்சியாகும்.
                   நன்றி -TNTJ DUBAI

Jan 8, 2011

முடிசாயும் கொடிசாயாது...

01.08.05 அன்று சவூதி மன்னர் ஃபஹத் மரணம் அடைந்தார். அவர் இறந்ததும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இப்படி உலகச் சந்தையை உலுக்கி எடுத்த அந்த சவூதி மன்னரின் மரணத்தை மக்கள் உன்னிப்பாகக் கவனித்தனர்.

உலகெங்கிலும் உள்ள நாட்டுத் தலைவர்கள் இறந்ததும் அரசாங்க விடுமுறை, அரைக் கம்பத்தில் கொடியைப் பறக்க விடுதல், அரசு மரியாதையுடன் கூடிய அடக்கம் போன்ற வழமைகள் எதுவுமின்றி சாதாரணமாக பொது மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றதைப் பார்த்து உலக மக்கள் ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் உறைந்து போயினர். அவர்களுக்கு இந்த மரணம் ஏதோ ஒரு செய்தியை உரைத்தது, உணர்த்தியது.

அது உணர்த்திய செய்தி என்ன என்பதை 03.08.05 அன்று வெளியான இந்து நாளேடு தெளிவாகவே போட்டு உடைத்தது. சவூதி அரசாங்கம் பின்பற்றுகின்ற வஹ்ஹாபியிஸம் தான் இதற்குக் காரணம் என்று விளக்கம் தெரிவித்திருந்தது.

வஹ்ஹாபியிஸம் என்ற தனிக் கொள்கை ஏதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை அதன் தூய வடிவில் நிலை பெறச் செய்தவர் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்கள். அதன் பின்னர் தூய இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு வஹ்ஹாபியிஸம் என்ற பெயர் வழங்கப்படுகின்றது. எனவே தூய இஸ்லாமிய அடிப்படையில் நடைபெற்ற சவூதி மன்னரின் அடக்கம் உலக மக்களின் கவனத்தைக் கவர்ந்தது.


இப்போது இந்தியாவுக்கு வருவோம்

12.04.2006 அன்று கன்னட நடிகர் ராஜ்குமார் என்பவர் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் அமளி துமளியானது. கொளுத்தப் பட்டது அதிகமில்லை. வெறும் 100 பஸ்கள் தான். பறி போன உயிர்கள் ஒரு போலீஸ்காரர் உட்பட ஒன்பது பேர் தான். சென்னையி­ருந்து செல்கின்ற பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது. போக்குவரத்து ஸ்தம்பித்தது. கலவரத் தீ மூண்டது.

இந்தியாவைக் கலக்கிய கன்னட நடிகர் ராஜ்குமாரின் மரணத்தையும், உலகையே கலக்கிய சவூதி மன்னர் ஃபஹதின் மரணத்தையும் ஒப்பீடு செய்யும் நோக்கில் இந்தக் கட்டுரை தன் பயணத்தைத் தொடர்கின்றது.

ராஜ்குமார் மட்டுமல்ல! எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என யாராக இருந்தாலும் இந்தியாவின் நிலை இது தான். தலைவர்களின் மரணத்தையொட்டி நடக்கும் கொடுமைகளை, கோரத் தாண்டவத்தை கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம்.

பாதி வழியில் பரிதவிக்கும் பயணிகள்

யாரடா அந்தக் கசுமாலம்? கடையைத் திறந்து வைத்திருக்கிறான். தலைவர் இறந்துட்டாரு! என்னடா துணிச்சல்? என்று கும்பல் தலைவன் சொல்­ முடிக்கவில்லை. அதற்குள் கடையில் உள்ள சோடா பாட்டில்கள் சாலையில் நாலா பக்கங்களிலும் தெறித்து சிதறின. மூட்டையில் உள்ள மைதா மாவு கருஞ்சாலையை வெண் சாலையாக ஆக்கியது. சுருட்டியவர்கள் சுருட்டிக் கொண்டனர்.

இபல இலட்சக் கணக்கில் செலவு செய்து பளிங்கு போன்று போடப்பட்டிருந்த கண்ணாடிகளை, இறந்து போன தங்கள் தலைவரின் பெயர் சொல்லும் விதத்தில் தொண்டர்கள் சுக்கு நூறாக்கினர். இட்­ விற்க வந்த ஒரு பாட்டாளி இட்­, சட்னி, சாம்பார் சகிதத்தை சாலைக்குப் படைத்து விட்டுப் போனான். அன்று அவனது பிழைப்பில் மண் விழுந்து விட்டது.

இவ்வாறு வானளாவ நின்ற வணிக வளாகங்கள் முதல் சாதாரண மளிகைக் கடைகள் வரை அனைத்து வணிகத் தலங்களும் பெருத்த சேதத்துக்கும், பாதிப்புக்கும் உள்ளாகி உடனே கதவுகள் இழுத்து மூடப்பட்டன. மின்னல் வேகத்தில் பல கோடி சொத்துக்கள் பாழாயின. கொஞ்ச நேரத்தில் கடைத் தெருக்கள் வெறிச்சோடிப் போய் மறைந்து போன தலைவருக்காக மவுன விரதம் பூண்டன.

சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்கள் காட்டுப் பாதைகளில் நிறுத்தப்பட்டன. அதனுள் மறுநாள் தலைப் பிரசவத்திற்காகத் தாயகம் செல்ல விரைந்த ஒரு பெண்ணின் சோக முனகல், பிரசவ வ­, துடிப்பு சக பயணிகளின் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது. நெஞ்சு வ­க்கிறது என்று துடிக்கும் இன்னொரு பயணியின் கதறல், அலறல் அங்கிருந்த பயணிகளின் காதைத் துளைத்தது.

இலட்சக் கணக்கில் செலவழித்து விசாவைப் பெற்று மறுநாள் காலை விமானத்தைப் பிடிப்பதற்காகத் தலைநகர் நோக்கிப் புறப்படுகின்றான். அந்த ரெயிலும் நடுக் காட்டில் தலைவர் மரணத்திற்காக நின்று வருத்தம் தெரிவித்துக் கொண்டிருந்தது.

கொண்டு வந்த உணவு, குடிநீர் தீர்ந்து போய் கூட்டமாக வந்த பயணிகள் கும்பி எரிந்தனர். குழந்தைகள் கூப்பாடு போட்டு அழுதனர். ஆம்! தலைவரின் மரணத்திற்காக!

ரெயில்களின் கதி இதுவென்றால் பேருந்துகளின் கதி என்ன? பல பேருந்துகள் தலைவரின் மரணத்திற்கு சிம்பா­க்காக இரங்கல் தெரிவித்து, டிப்போவை நோக்கி, கண்ணாடி இல்லாமல் அழுது கொண்டே ஓடின. ஆம்! காரணம், தொண்டர்கள் தங்கள் தலைவரின் மரணத்திற்காகக் கல் மழைகளால் அர்ச்சனை செய்து கண்ணாடிகளைக் கா­யாக்கி விட்டனர்.

Aug 30, 2010

உம்ராச் செய்ய எளிய வழிகாட்டி


அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! (அல் குர்ஆன் 2 : 196)

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். (அல் குர்ஆன் 3 : 96, 97)

ஹஜ், உம்ராவின் அவசியத்தையும் சிறப்புகளையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். பணம் மற்றும் உடலால் நாம் செய்யும் தியாகம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் இப்புனித வழிபாட்டை குர்ஆன் மற்றும் நபி வழி முறைப்படி நிறைவேற்ற வேண்டும்.


எனவே ஹஜ், உம்ராவின் முறைகளை எளிதாகவும் சுருக்கமாகவும் இதில் கூறியுள்ளோம். இதனைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். அல்லாஹ் நம்
அனைத்து வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வானாக!

உம்ரா செய்யும் முறை
  • எல்லையிலிருந்து இஹ்ராம் அணிந்து கொள்ளவேண்டும்.
  • தவாஃப் செய்ய வேண்டும்.
  • ஸயீ செய்ய வேண்டும்.
  • மொட்டையடிக்க வேண்டும்.
  • பெண்கள் ஆண் துணை அதாவது மஹ்ரம் (மணமுடிக்கவிலக்கப்பட்டவர்கள்) இல்லாமல் ஹஜ், உம்ரா செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
இஹ்ராம் அணியும் முறை

இஹ்ராம் அணிவதற்கெனஎல்லைகள் உள்ளன. அந்த இடம் வந்தவுடன்குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும்.

விமானத்தில் வருபவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும். ஆண்களுக்கு இஹ்ராமுடைய ஆடை, தைக்கப்படாத இரு வெள்ளை துணிகள் ஆகும். அதில் ஒன்றை வேட்டியைப்போல் உடுத்திக்கொள்வது, மற்றொன்றை மேனியில் போர்த்திக்கொள்வது.

இஹ்ராமின்போது பெண்கள் தாம் விரும்பும் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். ஆனால் உடலை சரியாக மறைக்காமலோ, அழகை வெளிக்காட்டும் விதமாகவோ இருக்கக்கூடாது. மேலும் முகத்தையும், முன்னங்கைகளையும் மறைக்கக் கூடாது.

தல்பிய்யா

எல்லை வந்ததும் உம்ராச் செய்பவர், லப்பைக்க உம்ரதன் என்று நிய்யத் சொல்லி உம்ராவை துவக்கிவிட்டு தல்பிய்யாவை தொடர்ந்து கூறவேண்டும்.

லப்பைக், அல்லாஹீம்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல் முல்க் லாஷரீக லக்.

பொருள் : உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். அல்லாஹ்! உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். இணை துணையற்ற உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். நிச்சயமாக புகழனைத்தும் உனக்கே உரித்தாகும்! மேலும்அருட்கொடையும், அரசாட்சியும் உன்னுடையதே! உனக்கு எவ்வித இணை துணையில்லை.

தல்பியாவை இஹ்ராம் அணிந்ததிலிருந்து கஃபாவிற்குள் நுழையும் வரை சொல்ல வேண்டும். ஆண்கள் தல்பியாவை சத்தமாகவும், பெண்கள் மெதுவாகவும் கூறவேண்டும். இஹ்ராமின் எல்லைக்கு உட்பகுதியில் இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும்.

இஹ்ராம் அணிந்துள்ளவர்கள் செய்யக்கூடாதவைகள்

  • திருமண ஒப்பந்தம் மற்றும் அது சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபடுவது.
  • மனைவியுடன் கூடுவது. (உடலுறவு கொள்வது).
  • வேட்டையாடுவது.
  • உடலுக்கோ, ஆடைக்கோ நறுமணம் பூசுவது.
  • தலையில் படக்கூடிய தொப்பி, தலைப்பாகை போன்றவற்றைக் கொண்டு தலையை மறைப்பது.
  • முடி, நகம் வெட்டுவது.
  • கெட்டவார்த்தைகள், வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது.
  • தைக்கப்பட்ட ஆடை மற்றும் காலுறை அணிவது.
கஃபத்துல்லாவை அடைந்தவுடன்...


பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் அல்லாஹீம்மஃப்தஹ் லீ அபுவாப ரஹ்மதிக

என்று கூறிய பின்பு தவாஃப் செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஆரம்பிக்கும் முன் தோளில் உள்ள துண்டை வலப்புற அக்குளின் கீழாக விட்டு இடப்புற தோள் மேலாக விட வேண்டும். வலதுபுற தோள் புஜம் திறந்தும், இடப்புற தோள் புஜம் மூடியும் இருக்க வேண்டும்.

தவாஃப் செய்யும் முறை


கஃபாவை ஏழு முறை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். கஃபாவில் ஹஜ்ருல் அஸ்வத் என்ற கல்லிலிருந்தோ அல்லது அதற்கு நேராக நின்றோ சுற்ற ஆரம்பித்து மீண்டும் அதனை வந்தடைவது ஒரு சுற்றாகும்.

பிஸ்மில்லாஹி அல்லாஹீ அக்பர் என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் (வாய்ப்பு இருந்தால்) ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிடவேண்டும். முடியவில்லையெனில் அதனை நோக்கி வலது கையை உயர்த்தி அல்லாஹீ அக்பர் என்று கூறவேண்டும். ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடாவிட்டால் தவாஃபில் எந்தக் குறையும் ஏற்படாது. எனவே ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதற்காக போட்டிபோட்டு பிறருக்குத் துன்பம் தரலாகாது.

முதல் மூன்று சுற்றுக்களில் நடையை நெருக்கமாக வைத்து தோள்களை உலுக்கி (விரைவான நடை போன்று) செல்லவேண்டும். (முதல் மூன்று சுற்றுகள் முடிந்ததும் விரும்பினால் தோள்களை மறைத்துக் கொள்ளலாம்) ஏனைய நான்கு சுற்றுக்களை சாதாரணமாக நடந்து செல்லவேண்டும்.

தவாஃபின் போது நமக்கு தெரிந்த திக்ர், துஆ மற்றும் நம் தேவைகளை கேட்டு வரலாம். குர்ஆனை ஓதிக்கொண்டும் வரலாம். ஆனால் ருக்னுல் யமானி மற்றும் ஹஜ்ரத் அஸ்வத் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தில்...

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரத்தி வஹஸனதன் வகினா அதாபன்னார்

பொருள் : 'எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்ற துஆவை மட்டும் ஓத வேண்டும்.

இவ்வாறாக ஏழு சுற்றுக்களை முடித்துக்கொண்டு எட்டாவது முறையும் ஹஜ்ரத் அஸ்வத்தை முத்தமிட முடிந்தால் முத்தமிட்டுவிட்டு, முடியாவிட்டால் வத்தஃகிதூ மிம்மகாமி இப்றாஹீம முஸல்லாஹ் என்று ஓதியவாறு மகாமே இப்ராஹீமிற்கு நேர் பின்னே நின்று தொழ வேண்டும். அதாவது நமக்கும் கஃபத்துல்லாவிற்கும் இடையில் மகாமே இப்ராஹீம் இருக்குமாறு தொழ வேண்டும். இந்த முதல் ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல் யாஅய்யுஹல் காபிரூன் - அத்தியாயம் 109 ஐயும், இரண்டாவது ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல்ஹீவல்லாஹீஅஹது (இஃக்லாஸ்) அத்தியாயம் 112 ஐயும் ஓத வேண்டும்.

ஸூரத்துல் காபிரூன்


بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ﴿١﴾ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٣﴾ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٥﴾ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ﴿٦﴾



ஸூரத்துல் இஃக்லாஸ்

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾


இவ்வாறாக தொழுகையை முடித்துக்கொண்டு ஸம் ஸம் தண்ணீரை அருந்த வேண்டும். இதன் பின்னர் ஸயீ (தொங்கோட்டம்) செய்வதற்காக ஸஃபா வாயில் வழியாக உள்ளே பிரவேசிக்க வேண்டும்.

ஸஃபா வாயில் வழியாக பிரவேசிக்கும் போது...



இன்னஸ்ஸஃபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்

பொருள் : ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். என்ற மறைவசனத்தை ஓதிவிட்டு ஸஃபாவின் மீது கொஞ்சம் உயர்ந்து கிப்லாவை முன்நோக்கி அல்லாஹ்வை ஒருமைபடுத்தி

அல்லாஹீ அக்பர் - அல்லாஹீ அக்பர் - அல்லாஹீ அக்பர்

லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹீ லாஷரிகலஹீ லஹீல் முல்கு வலஹீல் ஹம்து வஹீவ அலா குல்லி ஷையின் கதீர், லாயிலாஹ இல்லல்லாஹீ வஹ்தஹீ, அன்ஜ(ண)ஸ வஃதஹ், வனஸர அப்தஹ், வஹஜமல் அஹ்(ண)ஸாப வஹ்தஹ் என்ற திக்ரை ஓத வேண்டும்.

பின்பு இரு கைகளையும் உயர்த்தி இயன்ற அளவு பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு மும்முறை செய்ய வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேலே பச்சை நிற விளக்குகளை அடைகின்ற போது ஆண்கள் விரைந்து செல்ல வேண்டும். யாருக்கும் சிரமத்தை ஏற்படுத்த கூடாது. அடுத்த பச்சை நிற விளக்குகளை அடைந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். மர்வாவை அடைந்தவுடன் சற்று உயர்ந்து நின்று கஃபாவை முன்னோக்கி இரு கைகளையும் ஏந்தி லாயிலாஹ... என்ற முன்னர் ஓதிய துஆவை மும்முறை ஓதிவிட்டு ஸஃபாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைந்து செல்ல வேண்டும். அடுத்த பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். இவ்வாறாக ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவில் முடிவது ஒரு சுற்று, மர்வாவில் ஆரம்பித்து ஸஃபாவில் முடிவது இரண்டாவது சுற்று, இவ்வாறாக ஏழாவது சுற்று மர்வாவில் முடிவடையும். ஸஃபா, மர்வா அனைத்து சுற்றுக்களிலும் நமக்கு விருப்பமான துஆக்களை கேட்கவேண்டும். திருமறை வசனங்களையும் ஓதலாம்.

ஸயீயை முடித்துக் கொண்ட பின் ஆண்கள் மொட்டையிட்டுக் கொண்டும், பெண்கள் தங்கள் தலைமுடியிலிருந்து ஒரு அங்குலம் அளவிற்கு குறைத்து கொண்டும் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.


(இஹ்ராமிலிருந்து விடுபட) மொட்டையிட்டுக் கொண்டவருக்கு மும்முறை பரக்கத் வேண்டி நபி (ஸல்) அவர்கள் துஆ செய்துள்ளார்கள். மொட்டையிடாமல் முடியை குறைத்து கொண்டவருக்கு ஒரு முறை மட்டுமே துஆ செய்துள்ளார்கள். எனவே ஆண்கள் மொட்டையிட்டு இஹ்ராமிலிருந்து விடுபடுவதே சிறந்ததாகும்.


இத்துடன் உங்கள் உம்ரா இனிதே நிறைவு பெறுகிறது (இன்ஷா அல்லாஹ்)
நன்றி-DUBAITNTJ

Aug 18, 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதன் நிறுவனர்களில் ஒரு பிரிவினரான பி. ஜெய்னுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர் மற்றும் சிலரால் தனியாக பிரிந்து 16-05-2004 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்கிற பெயரில் இந்த அமைப்பு துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் தமுமுக அரசியல் கட்சியாக செயல்படுகிறது அது ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு தடங்கலாக உள்ளது என்கிற குற்றச்சாட்டுகளுடன் பிரிந்து வந்து இந்த அமைப்பை உருவாக்கியது. ஆனால் பின்னர் தங்களுக்கென்று பச்சை வெள்ளை கருப்பு கொடியுடன் அரசியல் சார்ந்த விவகாரங்களிலும் தலையிட்டு செயல்பட்டு வருகிறது. நஜ்ஜாத் அல்லது ஏகத்துவவாதிகள் என்று அழைக்கக்கூடியவர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டு தஃவா எனும் ஒரிறை அழைப்புப் பணியை செய்து வருகிறது.
பின்னர் எஸ்.எம். பாக்கர் மற்றும் சிலர் இந்த அமைப்பிருந்து நீக்கப்பட்டு 16-01-2009 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்கிற பெயரில் புதிய அமைப்பு துவங்கியுள்ளனர்.
பல்வேறு அரபு நாடுகளில் தமிழ் முஸ்லிம்களை நிர்வாகிகளாக கொண்டு கிளைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ரமதான் காலங்களில் ஜகாத் மற்றும் ஏனைய தர்மங்களைப் பெற்று தமிழகத்தில் இயங்கும் தலைமை அமைப்புக்கு வேண்டிய நிதியுதவிகளை செய்து வருகின்றன.
தமிழகத்தில் இரத்தானம் செய்வதில் இரண்டு முறை முதல் இடம் பிடித்த முஸ்லிம் சமுதாய இயக்கம்![ஆதாரம் தேவை]

பொருளடக்கம்

[மறை]

[தொகு] அமைப்பின் கொள்கைள்

1. இறைவேதம் திருக்குர்ஆனையும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறையான சுன்னத்தையும் தனது வாழ்வில் வழி காட்டியாகவும் ஜீவ நாடியாகவும் ஏற்று செயல் படுவதன் மூலமே ஒருவன் ஈடேற்றம் பெற முடியும்.
2. மனிதக்குலம் உயர்வதற்கு திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்கள் சுன்னத்தும் மாத்திரமே போதும் அவற்றுடன் வேறெதுவும் தேவையில்லை.
3. எந்தக் கருத்தாவது திருக்குர்ஆனின் ஏதேனுமொரு வசனத்திற்கோ, நம்பத்தகுந்த ஏதேனுமொரு நபி மொழிக்கோ முரணாக இருந்தால் அது எவரது கூற்றாக இருந்தாலும் புறக்கணிக்கப்படும்.
4. உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலின் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதைப் பற்றி மட்டும் கருத்து கூறப்படும்

[தொகு] கல்வி சேவை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாணவர் அணி தமிழகம் முழுக்க கல்வி சேவையை செய்துவருகின்றது.  
தவ்ஹீதை ஏற்ற படித்த இளைஞர்கள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் தமிழகம் முழுவதும் இடைவிடாமல் அடித்தட்டு முஸ்லீம் மக்களின் கல்வி வளர்ச்சிகாக அயராது உழைத்து கொண்டிருக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ், தமிழக்த்தில் எந்த முஸ்லீம் அமைப்புகளும், கல்வி அறகட்டளைகளும் செய்திராத கல்வி சேவைகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை 255 கல்வி சேவை நிகழ்சிகளை தமிழகத்தில் 154 இடங்களில் நடத்தி சாதனை புரிந்துள்ளது. TNTJ மாணவர் அணி செய்துவரும் பல்வேறு பணிகள்
கல்வி வளர்சி பணிகள். 
1. கல்வி கற்பதும் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை வாங்குவதும் எளிதானதே, இதை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கும் விதமாக அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாநிலம் முழுவதும் நடத்தி வருகின்றோம், மிக குறுகிய காலத்தில் தமிழகத்தில் 154 இடங்களில் 255 மேற்பட்ட கல்வி கருத்தரங்குகளை நடத்தி உள்ளோம், தமிழ முஸ்லீம்களுக்காக மட்டும் அல்லாமல் கர்நாடகா மாநிலத்திலும் கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்.
2. மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்காலாம் ? என்று அனைத்து சமுதாய மாணவ மாணவியரும் பயன்படும் வகையில் சிறந்த கல்வியாளர்களை கொண்டு கல்வி கருத்தரங்கங்களை நடத்தி வருகின்றோம்.
3 . ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரே நேரத்தில் கல்வி வழிகாட்ட கண்காட்சிகளை நடத்தில் அதில் ஒவ்வொறு படிப்பிற்க்கும் தனி பிரிவுகள் அமைத்து மாணவ மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டுகின்றோம்.
4. நல்ல கல்லூரியில் சேர அதிகமாக மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும், அதற்க்காக தேர்வுக்கு முன்னர் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சியை நடத்தி தேர்வு எழுதும் நுணுக்கங்களை மாணவ மாணவியருக்கு கற்று கொடுக்கின்றோம்.
5. வேலை வாய்ப்பு பெற ஆங்கில மொழித்திறமை அவசியம், அதற்க்காக ஆங்கில பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தி வருகின்றோம்.
6. ஏழை மாணவர்களுக்கும் கணினி அறிவை மேம்படுத்த இலவசமாக கம்ப்யூட்டர் சாப்ட் வேர் ஹார்ட்வேர் வகுப்புகள் நடத்தி வருகின்றோம்.
7. கல்வியின் அவசியத்தை விளக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரங்களிலும், பொது கூட்டங்களிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.
8. சமுதாய மாணவர்கள் வேலை வாய்ப்பு தகவல் அறிந்து கொள்ள உள்நாடு வெளிநாட்டில் வேலை உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை திரட்டி அனைவருக்கும் e-mail மூலமாக தெரிவிக்கின்றோம். (நீங்களும் வேலை வாய்ப்பு தகவல் பெற tntjjob@gmail.com என்ற e-mail முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்).
9. வேலைவாய்ப்பு பெற நடைபெறும் நேர்முக தேர்வில் எவ்வாறு பதில் என்று மாணவர்களுக்கு " நேர்முக தேர்வு பயிற்சி முகாம்" நடத்திவருகின்றோம்.
10. உயர் கல்வி நிறுவனக்கள் உயர்சாதியினருக்கே என்ற நிலைமையை மாற்றி IIT, IIM, IISc, NIT, AIMS போன்ற உயர் கல்வி நிறுவங்கள் நடத்தும் நுழைவு தேர்வு பற்றிய தகவல்களை திரட்டி முஸ்லீம்களும் உயர் கல்வி நிறுவங்களில் படிப்பதற்க்கான ஊக்கமும், வழிகாட்டுதலும், பயிற்சியும் இலவசமாக அளித்து வருகின்றோம்.
11. குழந்தைகளை எவ்வாறு படிக்க வைக்க வேண்டும், மாணவ மாணவியரின் கல்வி மேன்பாட்டில் பெற்றோர்களின் பெரும் பங்கை விளக்கி பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் களையும் நடத்தி வருகின்றோம்.
12. மத்திய மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவி தொகையை முஸ்லீம் மாணவ மாணவியருக்கு பெற்று கொடுக்கும் வகையில் அரசிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கும் முகாம்களை நடத்தி வருகின்றோம்.
13. ஏழை மாணவ மாணவியருக்கு உதவும் வண்ணமாக இலவச நோட்டு புத்தகமும், எங்களால் இயன்ற கல்வி உதவியும் செய்து வருகின்றோம்
சமுதாய பணிகள்
1. முஸ்லீம்களுக்கு எதிரான பத்திரிக்கைதுறை பயங்கரவாதத்தை தடுக்க நமது சமுதாய மாணவர்களும் பத்திரிக்கை துறையில் நுழைந்து சாதனை புறிய முஸ்லீம் மாணவர்க்ளுக்கு பத்திரிக்கை துறை சம்மத்தமாக பயிற்சி அளித்து வருகின்றோம்.
2. சமுதாய இளைஞர்களிடையே உள்ள வரதட்சணை மோகத்திற்க்கு எதிராக இளைஞர்களிடம் வரதட்சணையால் ஏற்படும் தீமைகளை விளக்கி வரதட்சணைக்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்து வருகின்றோம்
3. இளைஞர்கள் மது, சிகெரெட் போன்ற போதை பழக்கத்திற்க்கு அடிமையாகமல் தடுக்க மாணவர்களிடம் மது சிகெரெட் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீய்மைகளை விளக்கி போதை எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வருகின்றோம்.
4. நமது சமுதாய மாணவியர்களை காதல் என்ற போர்வையில் காவி கயவர்களிடம் சிக்காமல் தடுக்க மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இதை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றோம். காதல் என்ற பெயரில் நடக்கும் சமூக சீர்கேட்டிற்க்கு எதிராகவும் காதலர் தினத்தில் நடக்கும் அனாச்சாரங்களுக்கு எதிராகவும், காதலர் தின எதிர்ப்பு பிரச்சாரம் செய்கின்றோம்.
இஸ்லாமிய பணிகள்
1. முஸ்லீம்களின் இளைய சமுதாயம் ஷிர்க் பித்-அத் கொள்கையில் வீழ்ந்துவிடாமல் தடுக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏகத்துவ பிரசாரங்களை மேற்கொண்டுள்ளோம், தனி நபர் தாவா மூலமும், துண்டு பிரசூரங்கள் மூலமும் ஏகத்துவ அழைப்பு பணியை இளைஞர்கள் மத்தியில் முடுக்கிவிட்டுள்ளோம்.
2. மாணவர்கள் இஸ்லாத்தை முழுவதும்மாக அறிந்த்து கொள்ள ஒழுக்க பயிற்ச்சி முகாம் (தர்பியா) நடத்தி வருகின்றோம்.
3. மாற்று மத மாணவர்களின் இஸ்லாத்தை பற்றிய சந்தேகத்தை போக்கி இஸ்லாத்தின் பால் அவர்களை அழைக்கும் வண்ணம் "மாற்று மத மாணவர்களுக்கான கேள்வி-பதில்" நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றோம்
4. சிறந்த இஸ்லாமிய அறிஞர்களை கொண்டு முஸ்லீம் மாணவர்களுக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றோம்.
5. கல்லூரிகளில் ஜும்மா பயான் நிகழ்த்துவது, மாணவர் விடுதிகளில் (Hostels) இஸ்லாமிய பயான்கள் நிகழ்த்துவது போன்ற தாவா பணிகளை செய்து வருகின்றோம்.
6 . SMS மூலம் கல்வி செய்திகள் குர் ஆன் ஹதீஸ்கள் பரப்பி வருகின்றோம்
 இணையதள பணிகள்  
இணையதளத்தில் கல்வி வளர்ச்சி பணிகளையும் இஸ்லாமிய பணிகளையும் ஆற்ற www.tntjsw.blogspot.com என்ற இணையத்தை (வலை பூ) நிறுவி உள்ளோம். இதில் கல்வி பற்றிய தகவல்கள், குர் ஆன் ஹதீஸ்களையும் தொகுத்து வழங்கி உள்ளோம்.

[தொகு] அமைப்பின் நோக்கங்கள்

1. இவ்வமைப்பின் கொள்கைகளை தானும் ஏற்று பின்பற்றுவதுடன் அவ்வாறு பின்பற்றத் தூண்டுவது.
2. அமைப்பின் கொள்கைகளை விளங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தல் அதன்பால் அழைத்தல்.
3. மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சுகாதாரம், தொழில், தொழில் நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, சமூக நலம் உள்ளிட்ட எல்லாதுறைகளிலும் மேம்பாடு அடையப்பாடுபடுதல்.

அமைப்பின் செயல் திட்டங்கள்:

1. கல்வி நிறுவனங்கள் ஏற்ப்படுத்துதல்.
2. பத்திரிக்கைகள், மலர்கள், நுற்கள், பிரசுரங்கள், ஒளி-ஒலி நாடாக்கள், குறுந்தட்டுகள் வெளியிடுதல்.
3. தொலைக்காட்சி, வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்குதல்.
4. தெரு முனை பிரச்சாரங்கள், சந்திப்புகள், கலந்துரையாடல், கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துதல்.
5. நோக்கங்கள் நிறைவேற நவீன விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையும், சாதனங்களையும் தகவல் தொடர்பு சாதனங்களையும், கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துதல்.
6. அதற்காக சொத்துக்கள் வாங்கி பராமரித்தல்.
7. நிதிக்காக உண்டியல், சந்தா, நன்கொடை மூலம் பொருள் திரட்டுதல்.
8. நோக்கங்கள் நிறைவேறவும், செயல்திட்டங்களை செயல்படுத்தவும் சிறப்புக் குழுக்கள், அமைப்புகள் ஏற்படுத்தல்.
9. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் முஸ்லிம்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காகவும், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் முஸ்லிம்களின் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் தனித் தொகுதி முறையை பெற்றுத் தரவும் பாடுபடுவது.
10. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக – வரதட்சணை, வட்டி, சினிமா, ஆபாசம், அழகிப்போட்டி, போதைப்பொருட்கள், மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் வெளியிடுதல், பிரச்சாரக் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துதல் மற்றும் தேவைக்கேற்ப ஜனநாயக ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது.
11. அடக்கு முறைகள், வரம்பு மீறல்கள், மனித உரிமை மீறல்கள், சட்ட மீறல்கள் இவற்றுக்கெதிராகவும் போராடுவது.
12. பாதிக்கப்பட்ட – அநீதி இழைக்கப்பட்ட எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் மேற்கொள்வது.
13. மதவெறி , வன்முறை கலாச்சாரங்களை ஒழிப்பதற்குப் பாடுபடுவது.
14. இளைஞர்களை வன்முறையின் பக்கம் செல்வதை விட்டும் தடுப்பதற்கு அறவழிப்போராட்டத்திற்கான வழிமுறைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லி அவர்களை சிறந்த நெறியாளர்களாக உருவாக்கப்பாடுபடுவது.
15. மத தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தலோ, பாதிப்புகளோ ஏற்பட்டால்; அவற்றை ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் வலிமையாக எதிர்ப்பது.
16. அனைத்து மத, இன, மொழி மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்திட தேவையான அனைத்து முயற்ச்சிகளையும் மேற்க்கொள்வது.

[தொகு] தப்லீக் ஜமாத்துடன் உள்ள பொதுவான பிணக்குகள்

[தொகு] தமுமுகவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மற்றும் பிணக்குகள்

[தொகு] வெளியிணைப்புகள்

Jul 25, 2010

TNTJ திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் A.சாதிக் தீவுத்திடல் உரை

Jul 4, 2010

தீவுத்திடல் மாநாடு நேரலை

இறைவனின் பேரருளால் இன்று 04-07-2010 நடை பெறஉள்ள மாநாட்டு நிகழ்ச்சிகளை நேரடியாக இணையத்தில் காண கீழ்க்காணும் லிங்கை கிளிக் செய்யவும்
http://www.tntj.net/july-live/






Jul 3, 2010

tntj July-4 Misra








விருப்ப மொழியில் குர்ஆன்