உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்...
நம்மில் பலரும் இணையதளங்களில் வரும் இஸ்லாத்திற்க்கெதிரான பதிவுகளை எதிர்க்கொண்டு எழுத்து விவாதங்களில் பங்கேற்றிருப்போம். எழுத்து விவாதங்கள் என்பது, பெரும்பாலான நேரங்களில் திசை திரும்பிதான் போகின்றன. எழுதும் நமக்கும் ஒருவித சோர்வைத்தான் தருகின்றன. விவாதங்களில் கலந்து கொள்ளாமல் விடலாம் என்றால் அதுவும் முடியாது. ஏனென்றால் நம்மிடம் பதிலில்லை என்று நினைக்க வாய்ப்புள்ளது.
ஆனால் இந்த விவாதங்கள் சரியான முறையில் நடந்தால் நமக்கு நிறைய பலனுள்ளது. சமீப காலங்களாக எழுத்து விவாதங்கள் நம் சகோதரத்துவத்தை பறைச்சாற்றிவருகின்றன. ஒற்றுமையை அதிகரிக்க வைத்திருக்கின்றன. அந்த வகையில் இந்த விவாதங்களை முன்வைப்போரை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், நிறைய சகோதரர்களை இப்போதெல்லாம் விவாதங்களில் காணமுடிகிறது. இது இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் இறைவனுக்கே...
இந்த பதிவு எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் நம் சகோதர்களுக்கு ஒரு சிறு உதவி.
இந்த பதிவில் இரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அதுவும் முழுமையாக அல்ல, சின்ன அடிப்படையை மட்டும்தான்...
1. நான் எப்போதும் சொல்லுவதுண்டு, நாத்திகத்தை வெல்ல இஸ்லாமினால் மட்டுமே முடியும் என்று. அது அவ்வப்போது நிரூபணமாகி தான் வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்...
நமக்கெல்லாம் தெரிந்ததுதான், நாத்திகத்திற்கு இன்றைய சூழ்நிலையில் பெரிதும் உதவிபுரிவது பரிணாம வளர்ச்சி கோட்பாடுதான். அது ரீலா இல்லை ரியலா என்ற விவாதம் அன்றிலிருந்து இன்றுவரை இருந்து கொண்டுதான் இருக்கிறது.
பெருமளவு மக்களை திசைதிரும்ப வைத்திருக்கிறது இந்த நிரூபிக்க படாத தத்துவம். பரிணாம வளர்ச்சி கோட்பாடு (அல்லது தத்துவம்) இந்த வகையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது.
நம் ஒவ்வொருவரும் இந்த தத்துவத்தின் அர்த்தமற்ற வாதங்களை அம்பலப்படுத்துவது முக்கியம். ஒவ்வொரு விவாதத்தின் போதும் இதை சேர்த்துக்கொள்வதும் காலத்தின் அவசியம்.
மிக முக்கியமான ஒன்று, பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் எல்லாப் பகுதிகளையும் நான் மறுப்பதில்லை. ஏனென்றால், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை என்னை பொறுத்தவரை இரண்டாக பிரிக்கலாம்.
நம் ஒவ்வொருவரும் இந்த தத்துவத்தின் அர்த்தமற்ற வாதங்களை அம்பலப்படுத்துவது முக்கியம். ஒவ்வொரு விவாதத்தின் போதும் இதை சேர்த்துக்கொள்வதும் காலத்தின் அவசியம்.
மிக முக்கியமான ஒன்று, பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் எல்லாப் பகுதிகளையும் நான் மறுப்பதில்லை. ஏனென்றால், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை என்னை பொறுத்தவரை இரண்டாக பிரிக்கலாம்.
