Apr 8, 2010

விதியின் அமைப்பு ஓர் நினைவூட்டல்‏

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
விதியின் அமைப்பு ஓர் நினைவூட்டல்
நான் ஒரு நாள் வாகனத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்பொழுது அவர்கள் சிறுவரே! உமக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிரேன்.
அல்லாஹ்வின் கட்டளைகளை பேனிக் கொள்ளும். அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அல்லாஹ்வின் கட்டளைகளை பேணிக் கொள்ளும் அல்லாஹ் உமக்கு உதவுவான், எதைக்கேட்டாலும் அல்லாஹ்விடம் கேட்பீராக ! உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடுவீராக !
அறிந்து கொள்க !
மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி ஏதாவதொரு பொருள் கொண்டு உமக்கு பயன் வழங்க நாடினாலும், அல்லாஹ் உமக்கு எதை எழுதியுள்ளானோ அப்பொருளைக் கொன்டேத் தவிர வேறு எதனை  கொண்டும் அவர்களால் உமக்கு பயன் அளிக்கவும், முடியாது இடர் இழைக்கவும் முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன, ஏடுகள் காய்ந்து விட்டன, தக்தீர் எனும் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. நூல்- திர்மிதி
மற்றொரு அறிவிப்பில்
அல்லாஹ்வின் கட்டளைகளைப்  பேணிக்கொள் !
அவனை உமக்கு முன்னால் பெற்றுக்கொள்வாய் !
உமது செழிப்பான காலங்களில் அவனுக்கு நன்றி செலுத்துவாயாக !
உமது கஸ்ட்டமான காலத்தில் அவன் உமக்கு உதவுவான்.
அறிந்து கொள்க !
உம்மை எது வந்தடையாமல் சென்று விட்டதோ, அது உமக்கு சேர வேண்டியதல்ல.
உம்மை எது வந்தடைந்து விட்டதோ அது உம்மை விட்டு தவறி சென்று விடக் கூடியதுமல்ல.
அறிந்து கொள்க !
நிச்சயமாக உதவி பொருமையுடன் உள்ளது,
நிச்சயமாக மகிழ்ச்சி கஸ்டத்துடன் உள்ளது,
நிச்சயமாக துன்பம் இன்பத்துடன் உள்ளது,
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி ) அவர்கள். நூல் திர்மிதி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இதைப் படிப்பவர்களில் அனேகர் இதில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை ஏற்கனவே அறிந்தவர்களாக இருந்தாலும் அற்ப உலகின் இன்ப வாழ்வு சிலநேரம் விதியின் அமைப்பை மறக்கடிக்கச் செய்து வரம்பு கடக்கச் செய்து விடுவதால் இம்மடல் ஓர் நினைவூட்டல் மட்டுமே.
முந்தவும் செய்யாது...
மனிதன் உயிர் வாழும் கால அளவு அவனுடைய விதியில் எழுதப்பட்டதிலிருந்து வினாடிப் பொழுதுக் கூட முந்தவும் செய்யாது, பிந்தவும் செய்யாது என்பதை நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்னே நடந்த பல அதிசயத்தக்க சம்பவங்களின் மூலமாக மெய்சிலிர்த்திருக்கின்றோம்.
அறவே ஆக்ஸிஜன் புக முடியாத 200அடி, 300அடி அதள பாதாளத்தின் கும்மிருட்டுக்குள்; சிறு குழந்தைகள் விழுந்து இரண்டு, மூன்று நாட்கள் வரை மயங்கிய நிலையில் கிடந்து வெளியில் கொண்டு வந்து உயிர் பிழைத்த அதிசயத்தைக் கண்டு மெய்சிலிர்த்திருக்கின்றோம்.
சமீபத்தில் ஏமன் நாட்டு விமானம் ஒன்று காமரோஸ் நாட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது கடலில் விழுந்து நொருங்கி அனைவரும் உயிரிழந்து சில சடலங்கள் கடலுக்கு மேல் மிதந்து கொண்டிருந்த பொழுது அதனூடே 14 வயது சிறுமி பல மணிநேரம் மிதந்து உயிர் பிழைத்த அதிசயத்தைப் படித்து மெய்சிலிர்த்திருக்கின்றோம்.
ஒரே ஒரு இரவு இறந்த சடலத்துடன் பொழுது விடியும் வரை எவராலும் தணித்து உறங்கி எழ முடிவதில்லை. நேற்று வரை உயிருக்குயிராய் உற்ற துணையாய் இருந்தவர் இன்று செத்த சடலம்  அதுவும் பேயாக மாறிப் பிடித்து விடுவாரோ என்ற பீதியில் உறைந்து இவரும் சேர்ந்து இறந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
நடுக்கடலில் நள்ளிரவு நேரத்தில், சடலங்களுக்கு மத்தியில் கழுத்து எலும்பு முறிவுடனும்தீக்காயங்களுடனும் கை கால்களை அசைத்துக் கொண்டு பல மணி நேரம் அந்த சிறுமிப் போராடி இருக்கின்றார் என்றால் அது அந்த சிறுமியால் அதுவும் அந்த நிலையில் முடிகின்றக் காரியமா
முடியாது !
காரணம் !
கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்ததால் நிமிர்ந்து நீச்சலடிக்க முடியாது,
நிமிறாமல் படுத்த நிலையில் நீச்சலடித்தால் வாய் வழியே உப்பு நீர் உட்புகுந்து மூச்சுத் திணறி உடல் கடலுக்கடியில் தாமாக இழுத்துச் சென்று விடும்.
நீச்சலடிக்க முடிந்தாலும்
எத்தனை மணிநேரம் ?
எவ்வளவு தூரம்
எந்த திசை அறிந்து எங்கே செல்வது ?   
மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும் வரை அச்சிறுமி மிதந்து கொண்டிருந்த இடத்தில் அலைகள் அடங்கிக் கொண்ட அதிசயம், அலைகள் அடித்திருந்தால் பிணங்களுடன் சேர்ந்து சிறுமியும் இழுத்துச் செல்லப்பட்டிருப்பார்.
மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும் வரை கடல்வாழ் உயிரிணங்கள் தடுக்கப்பட்ட அதிசயம், கடல்வாழ் உயிரிணங்கள் அங்கு வந்திருந்தால் இரத்த ஓட்டம் நின்று விட்ட செத்த சடலங்களை விட்டு விட்டு இரத்த ஓட்டமுள்ள சிறுமியை கொத்தி கடலுக்குள் இழுத்து சென்றிருக்கும்.
பாலுங் கிணற்றில் வீசப்பட்ட சிறுவர் யூசுப் நபியை வழிப்போக்கர்கள் அக்கிணற்றில் தண்ணீருக்காக வாளியை விடும்வரை பாதுகாத்து வைத்திருந்து வாளியை பற்றிப் பிடித்துக் கொண்டு மேலெழச் செய்த வல்லமை மிக்க இறைவனுக்கு (அல்குர்ஆன் 12:9 ) இதுப் பெரிய விஷயமல்ல மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும்வரை அலைகளையும், மீன்களையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.
தக்தீர் எனும் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டதால் அந்த சிறுமி உலகில் உயிர் வாழும் கால அளவு மீதமிருந்ததால் அவளை மட்டும் காப்பாற்றி கரை சேர்ப்பது இறைவனின் பொறுப்பில் உள்ளது என்பதால் அதிசயமாய் உயிர் பிழைத்த சிறுமி என்ற தலைப்பிட்டு உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.http://www.tamilnews.cc/index.php?option=com_content&view=article&id=1530:2009-07-02-05-34-49&catid=35:world-news&Itemid=61  http://www.meelparvai.net/index.php?view=article&catid=115%3A2009-02-12-05-17-06&id=719%3A2009-07-15-10-24-17&option=com_content&Itemid=322
உயிரிணங்களைப் படைத்து அவைகள் வாழ்வதற்கு ஏற்றாற்போல் பிரபஞ்சத்தை வடிவமைத்த படைப்பாளன் அல்லாஹ் இந்த பிரபஞ்சத்தையும், அனைத்து உயிரினங்களையும் அழித்து மீண்டும் எழுப்பும் சர்வ சக்தி படைத்தவன். என்பதை உறுதியாக நம்புகிறோம்.

Apr 4, 2010

உலகின் முஸ்லிம்கள் மக்கள் தொகை

உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை
உலகிலுள்ள முஸ்லிம்கள் நாடுவாரியாக ஒரு புள்ளிவிவரத்தைக் கீழே காண்போம்      (நன்றி-அல்பாக்கவி.காம்)

நாடுகள் உலக முஸ்லிம் மக்கள் தொகை உலக மககள் மில்லியனில் உலக மக்களில் சதவிகிதம் உலக முஸ்லிம் சதவிகிதம்
ஆசியா பசிபிக் 972,537,000 972மில்லியன் 24.1 61.9
மத்தியக் கிழக்கு,வட ஆப்ரிக்கா 315,322,000 31மில்லியன் 91.2 20.1
சஹாரா,ஆப்ரிக்கா 240,632,000 24மில்லியன் 30.1 15.3
ஐரோப்பா 38,112,000 38மில்லியன் 05.2 02.4
அமெரிக்கா 4,596,000 4.5.5மில்லியன் 00.5 00.3
உலக நாடுகள் 1571,198,000 1571மில்லியன் 22.9 100
2009 புள்ளிவிவரப்படி உலக முஸ்லிம் மக்கள் தொகை

1823.48 மில்லியன்
ரஷிய நாடுகள் 61852000
6.மில்லியன்
சைனா 21667,000
21மில்லியன்
முஸ்லிமகள் அதிகம் வாழும் நாடுகள் (2009)
நாடுகள் முஸ்லிமகள் எண்ணிக்கை
01.இந்தேனேசியா 203 மில்லியன்
02.பாக்கிஸ்தான் 174 மில்லியன்
03.இந்தியா 161 மில்லியன்
04.பங்களாதேஷ் 145 மில்லியன்
05.எகிப்து 79 மில்லியன்
06.நைஜீரியா 78 மில்லியன்
07.ஈரான் 74 மில்லியன்
08.துருக்கி 74 மில்லியன்
09.அல்ஜீரியா 34 மில்லியன்
10.மொராக்கோ 32 மில்லியன்
11.இராக் 30 மில்லியன்
12.சூடான் 30 மில்லியன்
13.ஆப்கானிஸ்தான் 28 மில்லியன்
14.எத்தியோப்பியா 28 மில்லியன்
15.உஸ்பெகிஸ்தான் 26 மில்லியன்
16.சவூதி அரேபியா 25 மில்லியன்
17.எமன் 23 மில்லியன்
18.சைனா 22 மில்லியன்
19.சிரியா 20 மில்லியன்
20.ரஷ்யா 16 மில்லியன்
மொத்தம்   1302  மில்லியன் மக்கள்
ஐம்பது நாடுகளுக்கு மேல் முஸ்லிம்கள் அதிகம் வாழுகின்றனர்.
கிறித்தவர்-முஸ்லிம் மக்கள் தொகை ஒரு ஒப்பீடு.
1900 முதல் 2025 வரை கிறித்தவம் முஸ்லிம்
1900ல் உலக மக்கள் தொகை 26.9% 12.4%
1980ல் உலக மக்கள் தொகை 30% 16.5%
2000ல்உலக மக்கள் தொகை 29.9% 19.2%
2025ல்உலக மக்கள் தொகை  (PROJECTED) 25% 30%

Apr 1, 2010

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு

முஸ்லிம்களுக்கு பல்வேறு வகைகளிலும் பயன்படும் சாப்ட்வேர் ஒன்றை சகோதரர் வேலன் அவர்கள் தமது வலைப்பதிவில் வெளியிட்டுளள்ர்ர் அதை நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்

Mar 27, 2010

எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...


உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்...


நம்மில் பலரும் இணையதளங்களில் வரும் இஸ்லாத்திற்க்கெதிரான பதிவுகளை எதிர்க்கொண்டு எழுத்து விவாதங்களில் பங்கேற்றிருப்போம். எழுத்து விவாதங்கள் என்பது, பெரும்பாலான நேரங்களில் திசை திரும்பிதான் போகின்றன. எழுதும் நமக்கும் ஒருவித சோர்வைத்தான் தருகின்றன. விவாதங்களில் கலந்து கொள்ளாமல் விடலாம் என்றால் அதுவும் முடியாது. ஏனென்றால் நம்மிடம் பதிலில்லை என்று நினைக்க வாய்ப்புள்ளது. 

ஆனால் இந்த விவாதங்கள் சரியான முறையில் நடந்தால் நமக்கு நிறைய பலனுள்ளது. சமீப காலங்களாக எழுத்து விவாதங்கள் நம் சகோதரத்துவத்தை பறைச்சாற்றிவருகின்றன. ஒற்றுமையை அதிகரிக்க வைத்திருக்கின்றன. அந்த வகையில் இந்த விவாதங்களை முன்வைப்போரை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். 

அதுமட்டுமல்லாமல், நிறைய சகோதரர்களை இப்போதெல்லாம் விவாதங்களில் காணமுடிகிறது. இது இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் இறைவனுக்கே... 

இந்த பதிவு எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் நம் சகோதர்களுக்கு ஒரு சிறு உதவி.

இந்த பதிவில் இரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அதுவும் முழுமையாக அல்ல, சின்ன அடிப்படையை மட்டும்தான்...

1. நான் எப்போதும் சொல்லுவதுண்டு, நாத்திகத்தை வெல்ல இஸ்லாமினால் மட்டுமே முடியும் என்று. அது அவ்வப்போது நிரூபணமாகி தான் வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்...       

நமக்கெல்லாம் தெரிந்ததுதான், நாத்திகத்திற்கு இன்றைய சூழ்நிலையில் பெரிதும் உதவிபுரிவது பரிணாம வளர்ச்சி கோட்பாடுதான். அது ரீலா இல்லை ரியலா என்ற விவாதம் அன்றிலிருந்து இன்றுவரை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பெருமளவு மக்களை திசைதிரும்ப வைத்திருக்கிறது இந்த நிரூபிக்க படாத தத்துவம். பரிணாம வளர்ச்சி கோட்பாடு (அல்லது தத்துவம்) இந்த வகையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது.

நம் ஒவ்வொருவரும் இந்த தத்துவத்தின் அர்த்தமற்ற வாதங்களை அம்பலப்படுத்துவது முக்கியம். ஒவ்வொரு விவாதத்தின் போதும் இதை சேர்த்துக்கொள்வதும் காலத்தின் அவசியம்.

மிக முக்கியமான ஒன்று, பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் எல்லாப் பகுதிகளையும் நான் மறுப்பதில்லை. ஏனென்றால், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை என்னை பொறுத்தவரை இரண்டாக பிரிக்கலாம்.

Mar 22, 2010

பெரியார் தாசன் இப்போது இறைதாசனாக







ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَهَـذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُواْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ 155
இது நாம் அருளிய பாக்கியம் பொருந்திய வேதம். எனவே இதைப் பின்பற்றுங்கள்! (நம்மை) அஞ்சுங்கள்! அருள் செய்யப்படுவீர்கள்! 6:155.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இறை மறுப்பு போலி என்பதற்கும்,
இறைநம்பிக்கையே உறுதி என்பதற்கும்,
நேற்று வரை இறைமறுப்புக் கொள்கையில் பெரியார் தாசனாய் இருந்து இன்று இறைநேசனாக (முஸ்லிமாக) மாறிக் கொண்ட படித்த பண்பாளர் சகோ: அப்துல்லாஹ் அவர்கள் ஒரு எடுத்துக் காட்டாகும்.

இதற்கு முன்னர் பல மத வேத கிரங்தங்களை பார்வையிட்டவர் இறுதியாகவே திருக்குர்ஆனை ஆய்வு செய்து இதையே கடவுள் வார்த்தையாக உணருகிறேன் என்றும் 14 நூற்றாண்டுகளாகியும் இன்றுவரை அது மாற்றம் செய்யப்படாமல் அதேப் பொலிவுடன் இருப்பது இது கடவுள் வார்த்தைகள் தான் எனும் எனது நம்;பிக்கையை இன்னும் வலுப்படுத்துகிறது என்றுக் கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ரியாத்தின் பிரபல அரப்டைம்ஸ் நாளேட்டிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அல்லாஹ் பெரியவன், அல்லாஹ்விற்கேப் புகழ் அனைத்தும். http://arabnews.com/saudiarabia/article29180.ece

இதுபோன்றே நீரோட்டம் அடியார் அவர்கள் அவருடைய சிறை வாழ்க்கையில் அனைத்து  மத வேத கிரந்தங்களையும் படித்து விட்டு இறுதியாகவே திருக்குர்ஆனையும், அதன் மெஸேஞ்சர் முஹம்மது நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்க்கை வரலாற்றையும் படித்துவிட்டு இஸ்லாத்தை ஏற்றதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜியாவுல் ஹக் அவர்களின் ஏற்பாட்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற அவர் எழுதிய இஸ்லாம் என் காதல் எனும் நூல் வெளியீட்டு விழாவில் கூறினார்.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தன் தந்தையாருடன் திவ்ய பிரபந்த பாசுரங்களை படித்து ஆய்வு செய்து கொண்டிருக்கையில் திருக்குர்ஆனையும் படித்தால் என்ன ? என்ற சிந்தனை மேலிட திருக்குர்ஆனைப் படித்து விட்டு சுஜாதா அவர்கள் கூறிய வாசகங்கள் திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல என்பதை அதன் மொழியியல் முறைமையை (Linguistic Context)    ஆராய்ந்தறிந்தவர்களால் உணர முடியும் என்றுக் கூறினார். தினமனி ரம்ஜான் மலர் 2003.

உலகின் 100 தலைவர்களின் சாதனைகளை எழுதிய மைக்கேல் ஹார்ட் அவர்கள் திருமறைக் குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றையும், படித்து ஆய்வு செய்தப் பின்னர் ஆன்மீகம், அரசியல் இரண்டிலும் வெற்றி அடைந்தவர் முஹம்மதைத் தவிர உலகில்; வேறு எவருரையும் நான் கண்டதில்லை என்றும், 14 நூற்றாண்டுகளாகியும் இன்றுவரை திருமறைக் குர்ஆனும், முஹம்மது நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்க்கை வரலாறும் சிறுதும் மாற்றம் செய்யப்படாமல் அதேப் பொலிவுடன் இருப்பதைக்கண்டு ஆச்சரியம் அடைந்ததாகக் கூறி அண்ணலார் அவர்களை சாதனையாளர்களில் வரிசையில் முதலில் இடம் பெறச் செய்ததற்கு இதுவே காரணம் என்றும் அவருடைய வாசகர்களுக்கு எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மைக்கேல் ஹார்ட் த ஹண்ட்ரட் நியூயார்க் ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி 1978 பக்கம் 33.

4:82. அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

திருமறைக குர்ஆனை கவனமாகப் படித்து ஆய்வு செய்தவர்கள் திருமறைக்குர்ஆனை இது கடவுள் வார்த்தைகள் அல்லாமல் மனித வார்த்தைகள் அல்ல என்றே இதுவரைக் கூறி வந்துள்ளனர்.

இன்று சிலர் திருமறைக்குர்ஆனைப் படிக்காமல், அதை ஆய்வு செய்யாமல் அவர்களின் தலைவர்கள், மதபோதகர்கள் மேடையில் முழங்குகின்ற, அவர்களின் பத்திரிகைகளில் எழுதுகின்றவைகளைப் படித்தும், கேட்டும் திருமறைக் குர்ஆனிpன் மீது தவறான அபிப்பிராயம்; கொள்கின்றனர், விமர்சிக்கின்றனர் என்பதற்கு திராவிடர் கழகத்தினருடன் ( டாக்டர் எழிலன் உட்பட ) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் நடத்திய விவாதம் ஒருப்பெரிய எடுத்துக்காட்டாகும். http://onlinepj.com/bayan-video/vivathangal/iraivan_irukinrana/


மறுமை
உயிரில்லாத ஒன்றிலிருந்து (களி மண்ணிலிருந்து) படைக்கப்பட்ட முதல் மனிதரின் உயிர் அணுக்களிலிருந்து உலகம் முழுவதும் மனித இனத்தை பரவச்செய்த இறைவனுக்கு அவர்கள் மொத்தமாக மரணித்தப் பின்னர் ஒன்றுக் கூட்டி எழுப்புவது கடினமானதல்ல என்பதை சிந்தித்தால் போலியான இறைமறுப்பிலிருந்து விடுபட்டு உறுதியான இறைநம்பிக்கையின் பால் மாறி விடலாம்.

Ø  77. மனிதனை விந்திரிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.
Ø  78. அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
Ø  79. ''முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்'' என்று கூறுவீராக!
Ø  80. அவன் பசுமையான மரத்திரிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிரிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.
Ø  81. வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.
Ø  82. ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும்.
Ø 83. எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன்.10 அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! அத்தியாயம்-36


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃ பாரூக்

Mar 16, 2010

அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால் அரங்கேறும் விழா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே!நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்
(திருக் குர்ஆன் 7:194)
ரபீவுல் ஆகிர் மாதம் பிறந்து விட்டது. முஹ்யித்தீன் ஆண்டவர்(?) பிறந்த நாள்விழா கொண்டாட்டங்கள் குதூகலத்துடன் தொடங்கப்போகின்றன. இதயத்தில் இதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச ஈமானும் கொடிமரங்களில் இனி தஞ்சமடையப் போகின்றன. (நவு+து பில்லாஹ்) அல்லாஹ் நம்மைக் காப்பானாக.
தூய இஸ்லாத்தில் இல்லாத திருவிழாக்களும் வழிகேடுகளும் மாற்றார் எள்ளி நகையாடும் விதத்தில் முஸ்லிம்கள் என்று தம்மை கூறிக் கொள்பவர்களால் இன்னமும் அரங்கேற்றப் படுவதைக் கண்டு நம் நெஞ்சு பொறுக்குதில்லையே!
   அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அநாச்சாரங்களில் முஹ்யித்தீன் அப்துல்; காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் நடக்கும் அநாச்சாரங்கள் தான் கொடுமையிலும் கொடுமை.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்கள் பெயரால் நடக்கும் அநாச்சாரங்கள் அந்தந்த ஊர்களில் தான் நடக்கின்றன. ஆனால் தமிழகமெங்கும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் நடக்கும் கேளிக் கூத்துக்கள் சொல்லி மாளாது.

Mar 12, 2010

அருள்மறை குர்ஆனுக்கு ஓர் அற்புதமான இணையதளம்

  • திருமறை குர்ஆனின் தேன்மதுர கிராஅத்தை 22 புகழ் பெற்ற “காரி“களின் குரல் வளத்தில் கேட்க விரும்புகிறீர்களா? 
  • திருமறை குர்ஆனின் மொழியாக்கத்தை உலகின் புகழ் பெற்ற 35க்கும் மேற்பட்ட மொழிகளில் படிக்க விரும்புகிறீர்களா?
இதோ உங்களுக்காக ஓர் அற்புதமான இணைய தளம்

  • அத்தியாயம் வாரியாக
  • பகுதி வாரியாக
  • பக்கம் வாரியாக
  • வசன எண் வாரியாக
உங்கள் விருப்பம் போல் வசனங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்

அரபி எழுத்துருக்களை உங்கள் விருப்பத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்

எழுத்து அளவையும் உங்கள் விருப்பத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்

உலகின் 35க்கும் மேற்பட்ட மொழிகளில் உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு  செய்து கொண்டு அரபி மொழி வசனங்களில் உங்கள் மவுஸை நகர்த்தினால் போதும் அந்தந்த மொழிகளில் திருமறை குர்ஆனின் மொழி பெயர்ப்பு உங்களை அசத்தி விடும்.

திருமறை குர்ஆனின் தேன்மதுர கிராஅத்தை உலகின் புகழ்பெற்ற பல்வேறு அறிஞர்களின் குரல் வளத்தில் கேட்க வேண்டுமா? 
22 மார்க்க அறிஞர்களில் உங்களுக்குப் பிடித்தமான அறிஞரைத் தேர்வு செய்து அவர்களின் அருமையான குரல் வளத்தில் அல்லாஹ்வின் திருமறையை கேட்டு இன்புறுங்கள்.
மாஷா அல்லாஹ் இத்துனை அற்புதங்களையும் ஒரே இடத்தில் குவித்து வைத்து இணையத்தில் இறைமறை குர்ஆனை எழிலுடன் வடிவமைத்தவர்களை இதயத்தால் வாழ்த்துவதுடன் இவர்களுக்காக துஆவும் செய்வோம்.

Mar 2, 2010

இறைவனின் அருட்கொடையில் நம்பிக்கை இழக்காதீர்கள்!

மனிதர்கள் பெரும்பாலும் பாவங்களைச் செய்ய விரும்பாதவர்களாக, பாவத்தில் ஈடுபட்டாலும் பாவம் என்று அறிந்த நிலையில் அதை செய்தவர்களாக, செய்பவர்களாக, அதை நினைத்து மனம் வருந்திடக் கூடியவர்களாக, அவற்றில் இருந்து எப்படியாவது விரைவில் விடுபட முயல்பவர்களாகவே, (அதில் தோல்வியடைந்தவர்கள் அல்லது வெற்றி பெற்று நேர்வழியில் வாழ்பவர்கள் ஆகிய இரு சாராரும்) இருப்பது யதார்த்தமான ஒரு மனித இயல்பு ஆகும். இதற்கு மாற்றமாக விதி விலக்காக ஒரு சிலர் பாவங்களில் மூழ்கியும் அதை விட்டு விடுபடாமலும், அதையே தொடர்வது இருப்பினும் ஏதாவது ஒரு நேரம் அதை நினைத்து வருந்திடாமல் இருக்கமாட்டார் என்பதை மறுக்க இயலாது. அவர் பாவமன்னிப்பு கேட்பது கேட்காமல் இருப்பது என்ற எந்த நிலையில் இருப்பினும் புத்தி சுவாதீனமுடன் இருப்பின் அவர் இதை தமது வாழ்வில் ஏதேனும் ஒரு கணமாவது நினைத்து வருந்தி பச்சாதாபப்படாமல் இருக்க மாட்டார்.

ஆனால் ஒருவர் தாம் செய்வது பாவம் என்று அறியாமல் அதை தொடரும் போது அதை நன்மையென்று கருதி பலரும் செய்வதைக் காணும் போது அதை ஒரு தவறு என்று கூட கருதாமல் மார்க்க காரியம் எனும் அடிப்படையில் செயல்படும் போது அவர் அந்தச் செயல்களுக்குப் பாவமன்னிப்பு கேட்கும் வாய்ப்பே இல்லாத நிலையில் மரணித்து விடுகிறார் என்பது மிகப் பெரிய இழப்பு என்பதில் ஏதும் சந்தேகமில்லை. 

இஸ்லாம் எனும் தூய்மையான இறைமார்க்கம் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ்வினால் முழுமையாக்கப்பட்ட எவ்வித சேர்க்கைகளும் நீக்கங்களும் மாற்றமும் தேவையற்ற நிகரற்ற உன்னதமான ஓர் இறை மார்க்கமாகும். இதை அல்லாஹ் குர்ஆனில் கூறுவதை பார்க்கவும்:

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينا

...இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டே
ன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்.. (அல்குர்ஆன் 5 :3)

ஆனால் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பின்னர் பல்வேறு புதிய விழாக்கள், சிறப்பு மிக நாட்கள் மற்றும் அந்நாட்களில் செய்ய வேண்டிய நல்ல அமல்கள் (விசேஷ தொழுகைகள், நோன்புகள், திக்ருகள் போன்றவைகள்) நபி வழிக்கு மாற்றமாக ஒரு சிலரால் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மார்க்கமாகவும் நன்மையானதாகவும் கருதி பயபக்தியுடன் செயல் படுத்தப்படுகின்றன.

உதாரணத்திற்கு ஷஃபான் எனும் இஸ்லாமிய ஆண்டின் 8 வது மாதத்தில் செய்யப்படும் மார்க்க அனுஷ்டானங்கள், ஷபே பராஅத் மற்றும் மரணித்தவர்களுக்குப் பாவமன்னிப்பும் நன்மையும் சேர்க்க ஓதப்படும் பாத்திஹாக்கள் போன்ற இவற்றிற்கு குர்ஆனிலோ நபிவழியிலோ ஆதாரம் இல்லாததால் இவை நப(ஸல்) அவர்கள் எச்சரித்த நரகில் கொண்டு சேர்க்கும் பித்அத்துகள் ஆகும்.
நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை:

"வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது முஹம்மத்(ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது (பித்ஆத்) புதுமையாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடு; வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்" (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி), ஜாபிர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி.)

"எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே". (புகாரி, முஸ்லிம்)

(மேலும் பார்க்க ஷஃபான் மாத அமல்களும் ஷபே பரா அத்தும்)

இவற்றை முஸ்லிம் சமுதாயம் உணரத் தவறுகின்றது; கடமையான தொழுகைகள், சுன்னத்தான நபிலான நோன்புகள், குர்ஆன் ஓதுதல், தர்மம் வழங்குதல் போன்ற உறுதியான நன்மைகளில் பாராமுகமாக இருப்பவர்களும் கூட இத்தகைய பித்அத்களில் மிகுந்த அக்கறையோடு ஈடுபடுவதை காணமுடிகிறது. நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகுக்கு மார்க்கத்தைப் போதிக்க, கற்று கொடுக்க, நன்மை தீமைகள் எவை என்பதை அறிவிக்க அனுப்பப்பட்ட ஒரு உன்னதமான இறைத்தூதர் என்பதையோ, அவர்களுடைய அழகான வழிகாட்டுதல்கள் நம்மிடம் ஆதார பூர்வமான ஹதீஸ்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதையோ இவர்கள் அறிவதும் உணர்வதும் இல்லை என்பது கைச்சேதமே.

மோசடிகாரன், கொலைக்காரன், கொள்ளையடிப்பவன், மதுவருந்தும் (குடிக்கும்) பழக்கமுடையவன், திருடுபவன், விபச்சாரம் புரிபவன், வட்டி போன்ற தவறான முறையில் பொருளீட்டுபவன் போன்றவர்கள் தமது பாவங்களுக்கு மனம் வருந்தி அவற்றை கைவிட்டு மன்னிப்பு கேட்டு அல்லாஹ் நாடினால் நரகம் செல்வதில் இருந்து தப்பிவிட ஒருவேளை வாய்ப்புண்டு இன்ஷா அல்லாஹ்..

ஆனால் தொழுது, நோன்புகள் வைத்து இதர நல்ல காரியங்கள் செய்து அத்துடன் இது போன்ற நபி வழிக்கு மாற்றமான காரியங்கள் செய்து அது பாவம் என்று மனம் வருந்திடும் சிந்தனையும் பெறாத வகையில் ஷைத்தான் முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலோரை வழிகெடுத்து நரகத்திற்கு அழைத்து செல்வதில் வெற்றி காண்கிறான் என்பதும் வேதனைக்குரிய உண்மை. அல்லாஹ் மனிதன் தூய்மையாக மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்பதை வலியுறுத்தியுள்ளான். மேலும் இதை அங்கீகரிக்கின்றான் என்பதை கீழ்வரும் குர்ஆன் வசனத்தில் காணலாம்.

قُلْ يَاعِبَادِي الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لاَ تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعا ً إِنَّه ُُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

"என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்" (என்று நபியே!) நீர் கூறுவீராக.. (அல்குர்ஆன் 39 :53)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவமன்னிப்பு கோரலை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி)

மேலும் குர்ஆனில் அல்லாஹ்வின் எச்சரிக்கை:

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன் 4 : 115 )

மேலே கூறப்பட்ட உலகில் அனைவரும் பாவம் என்று கருதிடும், தெளிவான இதர பாவங்களை அறிந்து அவற்றிலிருந்து தங்களை தடுத்து தவிர்த்து கொள்வது போல், அல்லது தாங்கள் அறியாமல் செய்த எத்தனையோ பாவங்களை நினைத்து வருந்தி அவற்றை முறையாக கைவிட்டு பாவமன்னிப்பு கேட்பது போல், அல்லாஹ்வின் கட்டளைகள் மற்றும் நபி வழிக்கு மாற்றமான இது போன்ற பித்அத்துகளின் தீங்கையும் உணர்ந்து பாவ மன்னிப்பு கேட்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இது போன்ற பித்அத்துகளின் தீங்கை உணர்ந்து பாவ மன்னிப்பு கேட்டு இவற்றை கைவிட்டு முழுமையாக நபி வழியில் நடப்பதே, இவற்றை மார்க்க காரியம், நன்மையான அமல் என்று கருதியதால் பாவமன்னிப்பு கேட்கும் வாய்ப்பையும் இழந்து, மறுமையில் மிகப்பெரும் நஷ்டமடையும் நிலையில் உள்ள முஸ்லிம்களின் பெருங்கடமை என்பதை இந்த ஷஃபானில் உணர்ந்து இவற்றை உடன் கைவிட்டு, முழுமையாக நபிவழியில் நடந்து பாவமன்னிப்பும் கேட்டு ஈடேற்றம் பெற்றிட அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்.

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْأَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرا ً كَمَا حَمَلْتَه ُُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِه ِِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ .

"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; நிராகரிப்பாளர்களின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2:286)

ஆக்கம்: இப்னு ஹனீப்.
நன்றி-சத்தியமார்க்கம்.காம்

Feb 26, 2010

நபிகளாரின் வரலாறு - சிறந்த நூலுக்கு ஒரு இலட்சம் பரிசு!

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய எல்லாம் வல்ல இறைவனின் திருப் பெயரால்...



அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
இறைவனின் சாந்தியும், சமாதனமும் நம்மனைவரின் மீதும் உண்டாவதாக!


சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் மற்றுமோர் சிறந்த முயற்ச்சி!

உலகப் பெருந் தலைவர் அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாற்றினை இனிய, எளிய தமிழில், ஆதாரங்களின் அடிப்படையில், ஆய்வு நடையில் எழுதப்படும் சிறந்த நூலுக்கு ஒரு இலட்சம் பரிசு! 450 பக்கங்களில் கணிணி அச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.


சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்: 31.10.2010.


முகவரி:
RAHMATH PATHIPPAGAM
RAHMATH BUILDING
No.6, IInd Main Road,
C.I.T. Colony, Mylapore,
Chennai 600 004.
Tamil Nadu, India.
Phone Number : + 91 44 24997373


தொடர்புக்கு: M.A.முஸ்தபா, கைபேசி: +91-95000 37000.


T.K.T.ஷேக் அப்துல்லாஹ்.

ராசல் கைமா

ஐக்கிய அரபு அமீரகம்.

Mobile: +971-55-3848955.

Feb 22, 2010

சவூதிவாழ் இந்தியர்களுக்கு

அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

சவூதிஅரேபியா வாழ் வெளிநாட்டினர்கள் அவர்களின் அரசாங்கம் சார்ந்த கீழ்க்கண்ட தகவல்களை அறிய சவூதி அரேபிய அரசின் உள்விவகாரதுறை அமைச்சகம் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்;

  • உங்கள் குடும்பத்தினர்களின் விசா வரவு மற்றும் வெளியேற்றம் அறிய வேண்டுமா?
  • உங்களுக்கு இந்த வருடம் ஹஜ் செய்வதற்கு அனுமதியுள்ளதா / தகுதிபெற்றவரா?
  • உங்களின் சுகாதார அட்டை புதுப்பிக்கப் பட்டுள்ளதா?
  • உங்களுடைய ஆதரவில் வேலை செய்பவர்களின் குடியரசு அட்டை நிலை என்ன?
  • உங்களின் குடியரசு அட்டை (இக்காமா) நிலை என்ன?
  • உங்களின் விசா நிலை என்ன? (Exit / Re-Entry)
  • உங்களின் கைரேகை எடுக்கப்பட்டு அது அங்கீகரிக்கப் பட்டுவிட்டதா?
  • உங்களுக்கு போக்குவரத்து துறையின் அபராதம் உள்ளதா?
  • உங்கள் வாகனத்திற்கு எதுவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா?
இதுபோன்ற தகவல்களையும், மேலும் தகவல்களையும் பெற...


என்ற மேலேயுள்ள சுட்டியை அழுத்தி, E-Services Tab என்ற பகுதியை அழுத்தி ”Passports" என்ற தலைப்பை அழுத்துங்கள்.

 நாம் எதிர்பாராமல் திடீரென்று பயணம் செல்ல நேரலாம், மேலேயுள்ள எதாவது ஒன்றின் தடங்கலால் உங்கள் பயணம் செல்லமுடியால் ஆகலாம். எனவே இன்றே இவைகளை சரிபார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் கடவுச்சீட்டு (Passport) கலாவதியாகியிருந்து நீங்கள் அவசரமாக பெறவேண்டியிருந்தால் தட்கல்என்ற அவசரமுறையில்  இந்தியத் தூதரகத்தை அனுகினால் தருவார்கள் அவர்களின் இணையதள முகவரி

http://www.indianembassy.org.sa
(Tatkal service for issue of passport is also available)

பிரச்னைகள் வருமுன் காப்போம்”.

உங்களுக்கு தெரிந்த சவூதிவாழ் அன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

தகவல் உதவி: Ahmed Imthias (imthias@imthias.com)


சகோ. அபூஃபைஸல்
ரியாத்

Feb 21, 2010

நான் இஸ்லாத்தைத் தழுவினேன்-ஆமினா அசில்மி-பகுதி-2

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

சென்ற பதிவின் தொடர்ச்சி....
இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப்  பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள். 
குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.
இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கண


வர் மட்டுமே.ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
விவாகரத்து தவிர்க்க முடியாமல் போனது. ஆமினா அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இஸ்லாம் அப்பொழுது அங்கு மிக சிறிதே அறியப்பட்ட நேரம். அந்த சிறிதும் கூட இஸ்லாத்தை பற்றிய தவறான எண்ணங்களாகவே இருந்தன. ஆகவே நீதிபதி அவர்கள், குழந்தைகள் ஆமினா அவர்களிடம் வளர்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்றும், குழந்தைகள் ஆமினாவின் கணவரிடம் வளர்வதே அவர்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் தீர்ப்பளித்தார். ஆமினா அவர்களால் தாங்க முடியாத துயரம்.
அப்பொழுது நீதிபதி ஆமினா அவர்களுக்கு 20 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார். ஆம் அதேதான். ஒன்று அவர் கணவர் சொல்லுவது போல் இஸ்லாத்தை கைவிடுவது அல்லது குழந்தைகளை கணவரிடத்தில் ஒப்படைப்பது.
அவர் தன் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம்
வைத்திருந்தார். ஒரு தாய்க்கு இதை விட பெரிய இழப்பு என்ன இருக்க முடியும். ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல...வாழ்க்கை முழுவதும் தன் குழந்தைகளை பிரிந்திருக்கவேண்டும். அதே சமயத்தில் இஸ்லாத்தை துறந்து ஒரு பொய்யான வாழ்க்கையையும் வாழ முடியாது. இஸ்லாம் என்ற உண்மையை தன் குழந்தைகளிடம் மறைக்கவும் முடியாது.
"நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- குரான் 2:42  
"என் வாழ்வின் மிகத்துயரமான 20 நிமிடங்கள் அவை"
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், அவர் உடல் நி
லையில் உள்ள சில பிரச்சனைகளால் மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
"முன் எப்போதும் இல்லாத அளவிற்கு துவா செய்தேன்..............எனக்கு நன்றாக தெரியும், என் குழந்தைகளுக்கு அல்லாவிடம் தவிர வேறு பாதுகாப்பான இடம் இல்லையென்று. நான் அல்லாவை துறந்தால், எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கு இறைவனிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய அற்புதங்களை எடுத்து கூற முடியாமல் போய்விடும்"  
ஒரு தாய்க்கு இதை விட ஒரு பெரிய தியாகம் இருக்க முடியாது. ஆம்....அல்லாவிற்காக குழந்தைகளை ( ஒரு ஆண், ஒரு பெண் ) துறந்து விட்டார்...


தன்னால் இஸ்லாத்தை விட முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.
"நான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது என்னால் என் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது மிகக்கடினம் என்று அறிந்திருந்தேன். இதயம் கனத்தது, ஆனால் எனக்கு தெரியும், நான் சரியானதையே செய்தேன் என்று"
 மீண்டும் இஸ்லாத்தை ஆராய தொடங்கினார்.

Feb 20, 2010

நான் இஸ்லாத்தைத் தழுவினேன்- ஆமினா அசில்மி-பகுதி1

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த  சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ( International Union of Muslim Women ). 

ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. சொல்லி மாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ். 


"நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது" ----- ஆமினா அசில்மி

ஆமினா அசில்மி அவர்கள் கிறிஸ்துவ பின்னணியில் (Southern Baptist) இருந்து வந்தவர், தன் கல்லூரி காலங்களில் ஒரு மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர், பல விருதுகளை பெற்றவர்.

ஒரு கணினி கோளாறு இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது.  

Jan 28, 2010

இஸ்லாமிய வலைத் தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள்.

இணையத்தில் இஸ்லாத்தை இனிய தமிழில தேடும் அன்பர்கள் அனைவருக்கும் வசதியாக சகோதரர் ராஜகிரி கஸ்ஸாலி அவர்கள் தமிழ்முஸ்லிம் வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி வழங்கியிருக்கிறார். சகோதரர் அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டுரியது.
இஸ்லாமிய வலைத் தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளின் தொகுப்பைப் பார்வையிட இங்கே கிளிக்கவும்

Jan 15, 2010

நீங்கள் சவூதியில் வசிப்பவரா?

நீ்ங்கள் சவூதி அரேபியாவில் வசிப்பவரா? அப்படியானால் நீங்கள் இருக்கும் இடத்தில்இருந்து கொண்டே , முஸ்லிம் அல்லாத உங்கள் நண்பர்களுக்கு  தூய  இஸ்லாத்தை அறிமுகம் செய்து வைக்க உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்.
1.உங்கள் நண்பரின் மொபைல் எண் ( your Friend's Mobile Number)
2. அவர் எந்த நாட்டவர் என்னும் விபரம் (Nationality)
3. அவர் தாய் மொழி (Language)
ஆகிய விபரங்களை
0555988899
என்ற மொபைல் எண்ணுக்கு SMS செய்தால் போதும்.
இஸ்லாமிய அழைப்பு மொபைல் வழியாக நடக்கும். உங்கள் மூலம் ஒரு நண்பர் நேர்வழி பெறுவதில் கிடைக்கும் நன்மை அளவிட முடியாதது.
அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நடத்துவானாக!

Nov 20, 2009

புனித ஹஜ்ஜுக்குப் புறப்படுவதற்கு முன்

புனித ஹஜ்ஜுக்குப் போய் வருவதற்கு- ஹலாலான முறையில் சம்பாதித்த பணத்தை மட்டுமே பயண்படுத்துங்கள். பல்வேறு சிரமங்களுக்குக் கிடையே செய்யும் புனிதப் பயணம், விழலுக்கு இறைத்த நீராக வீணாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
உற்றார் உறவினர், உடன் பிறந்தோர், அண்டை அயலார், அனைவரிடமும் விடை பெறும் போது- அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டு- பிராயச் சித்தம் தேடியவர்களாப் புறப்படுங்கள்.கடன்கள் இருந்தால்- கொடுத்து முடித்து- அல்லது போய் வந்த பிறகு இன்ஷா அல்லாஹ் தருவதாக வாக்களித்து, கடன் கொடுத்தவுர் அதை மனமார ஏற்றுக் கொண்டால் மட்டுமே, ஹஜ்ஜுக்குப் புறப்பட ஆயத்தமாகுங்கள்.
புகழுக்காகவும், பெருமைக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் இல்லாமல் மெய்யாகவே இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் எண்ணத்தை இதயத்தில் வைத்துப் புறப்படுங்கள்.
வசதிக்காக அதிகமான உடமைகளை உடன் எடுத்துச் செல்லாதீர்கள். சென்று திரும்பும் வரையுள்ள சில தினங்கள், சின்னஞ்சிறு சிரமங்களை சகித்துக் கொள்ளுங்கள். குறைவான உடமைகள் உங்கள் பயணத்தை எளிதாக்கும்.
அவசரத்திற்கு தேவைப்படும் மருந்து வகைகளையும், முதலுதவி மருந்துகளையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பயணத்தின் போது, வகை வகையான உணவுகளுக்கு முக்கியத்துவம் தராமல், எளிமைளான உணவுப் பழக்கத்தைக் கடைப் பிடியுங்கள். வழிப் பயணம் இலகுவாக இருக்கும்.குறிப்பாக, ஹஜ்ஜுடைய நாட்களில், மினா அரபாத், முஸ்தலிபா, ஆகிய இடங்களில் எளிமையான உணவுகளை உண்ணுங்கள். அதிக நெரிசல் மிகுந்த இடங்களில் உங்கள் அவசரத் தேவைகளை நிறைவேற்ற அதிக நேரம் காத்திருக்க வேண்டி வரும்.
புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதிலிருந்து- திரும்பவும் உங்கள் இல்லம் வந்து சேரும் வரை- வழிப் பயணத்திலும், புனிதத் தலங்களில் தங்கியிருக்கும் போதும், சக ஹாஜிகளுடன் அன்பாகப் பழகி, ஒருவருக் கொருவர் உதவியாக இருங்கள். எந்த வகையிலும் பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
பல்வேறு குண நலன்கள் கொண்ட பலருடன் சேர்ந்து பயணம் மேற் கொள்ளும் போது, எல்லா வகையிலும் அணுசரித்துப் போகப் பழகிக் கொள்ளுங்கள். பொறுமையைக் கடைப் பிடியுங்கள்.
உடன் வரும் சக ஹாஜிகள்- முதியவர்களாக இருப்பின், அனைத்து வகையிலும் அவர்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து, அரவணைத்துச் செல்லுங்கள். அப்படி ஒரு முதுமை நமக்கு ஏற்படும்போது- நமக்கு உதவ சிலரை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
புனிதப் பயணம் மேற்கொள்ளும் பொன்னான வாய்ப்பை அடையப் பெற்றிருக்கிறீர்கள். வீண் பேச்சுக்கள், விதண்டாவாதம், சண்டை சச்சரவுகள், ஆகியவற்றைத் தவிர்த்து, அதிகமதிகம் இறைவணக்கத்தில் பொழுதைக் கழியுங்கள்.
மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுன்னபவியிலும், ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் கவனம் செலுத்துங்கள். இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

Feb 16, 2009

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?


சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008/09 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசை வென்ற கட்டுரை. - சத்தியமார்க்கம் நடுவர் குழு
---------------------------------------------------------------------
ஊடகங்களின் நன்மையும் தீமையும்

பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.

மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை தரும் உண்மை.

அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.

மறைத்தலுக்கும் திரித்தலுக்கும் காரணம்

உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.
நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் ஊறிப்போன மேற்குலகும் அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம் காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான காரணம் வேறுவிதமானது.

ஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி, சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும் திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம் அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.

வெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது கொள்கையாகவே கொண்டுள்ளன.

ஊடகங்களின் பாரபட்சமான போக்கு

தீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை. தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் அடைமொழியுடன் அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால் 'முஸ்லிம் தீவிரவாதி' அல்லது 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்னும் அடைமொழியுடன் வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.

எந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் 'ஊடக தர்மம்'.

முஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப் பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை 'பயங்கர ஆயுதங்கள்'; ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும் வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த காவல்துறையும் படம் காட்டாது.

பல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும் திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.

இதற்கான தீர்வு என்ன?

"நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை" இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.

இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும் வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான் அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்

முஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித் தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள் இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

நாளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட 'மாத்யமம்' நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருப்பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.

2.கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு

தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.

நம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.

சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

நமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள் உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும், இன்ஷா அல்லாஹ்.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

இனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.

உயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் ஊடகவியாலளர்கள் அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம் ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.

ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை. நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்

நம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள், பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக் கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில் சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.

6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்

நாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம் எழுத வேண்டும்.

எங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா?

நாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும் (பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல் தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும் எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.

7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள் துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் அல்லவா?

8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்

சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம் வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.

9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

அவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும் பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம். அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்

கைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும் உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின் உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம் நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்

ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.

ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.

ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர்.
பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.

12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்

டென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு ஆதரவாக அந்நாட்டு அரசு, "அது பத்திரிகை சுதந்திரம்" என்று சப்பைக் கட்டு கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே! அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற பத்திரிகைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

13.மக்கள் சக்திப் போராட்டம்

நம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும். இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.

சமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டதும் நினைவிருக்கலாம்.

14. இணையம் - நமக்கு வாளும் கேடயமும்

ஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும் மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.

நேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில் குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம், பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது.

இணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.

சில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க வழிவகை செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் முறியடிக்க வேண்டும்.

நாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப் படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும் சென்றடையும்.

வலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால் உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும். பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும்.

பதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம் குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன் குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.

இணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான அபூமுஹை, நல்லடியார், இறைநேசன், வஹ்ஹாபி, ஜீஎன், இப்னுபஷீர், மரைக்காயர், அபூசாலிஹா போன்ற சிறந்த பதிவர்கள் அருமையாக இப்பணியைச் செய்து வருகின்றனர். இவர்களைப்போல் இன்னும் ஏராளமான பதிவர்கள் அற்புதமாகவும் அமைதியாகவும் அழகாகவும் இணைய எதிரிகளை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து இணையத்தில் உலா வருபவர்கள் அறிவார்கள். இவர்களின் பதிவுகளை ஊன்றி கவனித்தால் ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

15. முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் பொதுவான பதிவுகள்

மொழி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைகள் இப்படிப் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்ட முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் நிறைய பேர் இருப்பது ஆறுதலான விஷயம். இஸ்லாமியப் பதிவுகள் எழுதும் எழுத்தாளர்களைவிடப் பொதுவான பதிவுகள் எழுதும் எழுத்தாளர்கள், இணையத்தில் இஸ்லாம் குறித்து மறைக்கப்படும் திரிக்கப்படும் செய்திகளை வெளிக் கொணர்வதற்கு மிகவும் ஏற்றவர்கள் எனலாம்.

இஸ்லாமிய பதிவுகளை முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பாலும் பார்வையிடுவர். எனவே இஸ்லாமியப் பதிவுகளில் எடுத்துவைக்கப்படும் கருத்துகள் முஸ்லிம்களை மட்டுமே சென்றடையும். ஆனால் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்டு இணையத்தில் உலாவரும் அனைத்துச் சமய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு நம்மைப் பற்றிய உண்மைகளை இத்தகைய வலைப்பதிவர்களால்தான் கொண்டு சேர்க்க முடியும்.

எனவே மொழி, இலக்கியம், கதை கவிதை கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமியப் பதிவர்களே! உங்கள் இலக்கிய ஈடுபாட்டுடன் நம் சமுதாயச் செய்திகளையும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான தகவல்களையும் இடையிடையே உங்கள் வாசகர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள். நடுநிலையான நல்லவர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் அற்புதமான எழுத்தாற்றலை இஸ்லாத்திற்காகப் பயன்படுத்தியதற்கு அளப்பெரும் கூலியை நாளை மறுமையில் பெறுவீர்கள்.

16.இஸ்லாமிய இணைய தளங்களின் மேலான கவனத்திற்கு

பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமாகவே இஸ்லாமியப் பிரச்சாரமும் நடக்கிறது என்பதே உண்மை. உலககெங்கும் இணைய வழியே இஸ்லாத்தை அறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம். இந்நிலையை உருவாக்கிய இஸ்லாமிய இணைய தளங்களைப் பாராட்ட வேண்டும்.

இஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம் எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.

சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும் ஆக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென ஏராளமான வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த தினமலர் நாளிதழுக்கெதிராக 'சத்தியமார்க்கம்' போன்ற இணைய தளங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் வாசகர்கள், தாம் வசிக்கும் நாடுகளில் அந்த நாளிதழின் இணைய தளத்தை முடக்க மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதை இணையத்தில் தொடர்புடைய பலரும் அறிவர். எனவே எண்ணற்ற வாசகர்களைத் தம்வசம் கொண்டுள்ள இஸ்லாமிய இணைய தளங்கள் நம் சமுதாய மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

17.மின்னஞ்சல் மூலம் உண்மையை உணர்த்துதல்

பல்வேறு இலவச மின்னஞ்சல் சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட கருத்துக்களின் உண்மையை விளக்கி எண்ணற்ற இணைய எழுத்தளர்கள் அற்புதமான மடல்களை எழுதிக் குவிக்கின்றனர். அத்தகைய மின்னஞ்சல்கள் நமக்கு வரும்போது சக நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும். மடலாடற் குழுமங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொண்டு உண்மையை நம் சக நண்பர்களுக்கு மத்தியில் - குறிப்பாக - பிறமத நண்பர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

முடிவுரை

"உங்களில் எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.

மேற்காணும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும் திரித்தலும் நம் கண் முன்னே நடைபெறும்போது "நமக் கென்ன?" என்று ஒதுங்கி நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய அநீதிக் கெதிராகக் களம் இறங்க வேண்டும்.

நம் சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடக உலகம் உணர வேண்டும்.
இதை உணர்த்த வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தால் ஊடகங்கள் மட்டுமல்ல உலகமே இனி நம் கைகளில், இன்ஷா அல்லாஹ்.
***
கட்டுரை ஆக்கத்திற்குத் துணை நின்ற நன்றிக்குரிய தளங்கள் மற்றும் பதிவுகள்
சத்தியமார்க்கம்.காம்
இதுதான்இஸ்லாம்.காம்
இஸ்லாம்கல்வி.காம்
http://palanibaba.blogspot.com
http://a1realisam.blogspot.com
http://masdooka.blogspot.com
http://majinnah.blogspot.com
ஆக்கம்: சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா.
---------------------------------------------
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

விருப்ப மொழியில் குர்ஆன்