Apr 27, 2008

நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும்

நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும்
தமிழ் மண்ணில் இஸ்லாம் தடம்பதித்து நூற்றாண்டுகள் பல கடந்த பின்பும் இஸ்லாத்தின் ஆணி வேராகிய இறைமறை குர்ஆனும் இறைத் தூதர் போதனைகளும் போதுமான அளவுக்குப் போதிக்கப்படாத காரணத்தால் மூடப் பழக்கங்களில் தங்கள் முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி மூழ்கிக் கிடந்த தமிழ் முஸ்லிம் சமுதாயம் 1980 களின் துவக்கத்தில் உறக்கத்திலிருந்து எழுந்து உட்காரத் தொடங்கியது எனலாம்.
உறங்கிக் கிடந்த தமிழ் முஸ்லிம் சமுதாயத்தைத் தட்டி எழுப்பி புரையோடிப் போன மூடப்பழக்கங்களைக் கண்டித்து உண்மையான இஸ்லாத்தை உரத்த குரலில் நம் சம காலத்தில் முழங்கியவர்களில் முதலாமவர்..
தூதுத்துவத்தை விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தவர்களில் பலர் ஏகத்துவத்தைக கண்டுக் கொள்ளாமலேயே இருந்த நிலையை மாற்றி தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏகத்துவத்தையும் தூதுத்துவத்தையும் முறையாகப்போதித்தவர்களில குன்றின் மேலிட்ட விளக்காகப் பிரகாசித்தவர்.
ஆண்டாண்டு காலமாய் ஆழப்பதிந்து போன அறியாமை இருளகற்றி தமிழ் முஸ்லிம் சமுதாயத்தை வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வந்த விடி வெள்ளி
ஏகத்துவக் கொள்கையைத் தன் இதயத்தில் தாங்கி தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பயணம் செய்து ஏகப்பட்ட எதிர்ப்புகளைத் துணிச்சலுடன் எதிர் கொண்டு ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலமாக சத்தியத்தை சமுதாயத்திற்கு மத்தியில் எத்திவைத்த பெருமேதை.
ஏகத்துவக் கொள்கையைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு, கொண்ட கொள்கையின் உறுதியைப் பறைசாற்றி தம் மனைவி மக்களுடன் காயல் பட்டணத்தில் முபாஹலாவைச் சந்தித்த கொள்கைக் குன்று.
முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரசுரங்கள் வாயிலாக அவ்வப்போது விஷமக் கருத்துக்களைப் பரப்பி வந்த கிறிஸ்தவர்களுக்கு பாடம் புகட்ட நெல்லை ஜெபமனியின் சவாலை ஏற்று 4 நாட்கள் விவாதம் நடத்தி வெற்றி கண்டவர்.
எவருமே கண்டு கொள்ளாத காதியானிக் கும்பலுடன் கோவையில் விவாதம் செய்து தூதுத்துவக் கொள்கையில் அவர்களின் குளறுபடிகளை தோலுரித்துக் காட்டியவர்.
தறி கெட்டுத் தடம் மாறிப் போன உமர் அலியையும் அவர் தம் கூட்டாளிகளையும் நேரடியாக இலங்கைக்கே சென்று விவாதம் நடத்தி அவரின் வறட்டுத் தத்துவங்களை தவிடு பொடியாக்கியவர்.
19 என்ற எண்ணை வைத்து பம்மாத்துக் காட்டிய ரஸாத் கலீபா போன்ற அரைக் கிறுக்கர்களின் கிறுக்குத் தனத்தை அம்பலப் படுத்தி அடக்கி வைத்தவர்.
ஊருக்கு ஊர் சவால் விட்டுக் கொண்டுத் திரியும் வாய்ச் சவடால் பேர்வழிகளின சவால்களை ஏற்று பகிரங்கமாக அறைகூவல் விட்டு புறமுதுகிட்டு ஓடவைத்தவர்.
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளை பல்வேறு ஊர்களில் நடத்திஇ தவறான புரிதல்களால் இஸ்லாத்தின் மீது அதிருப்தி கொண்டிருந்த எண்ணற்ற பிற சமயத்தவகளின் வித விதமான கேள்விகளுக்கு வியக்கத்தக்க முறையில் விடையளித்து அவர்களின் சந்தேகங்களைக் களைந்து இஸ்லாத்தின் பால் ஈர்ப்பை ஏற்படுத்தியவர்.
ஏராளமான பிற சமய சகோதர சகோதரிகள் இஸ்லாம் என்னும் இன்பப் பாசறையில் இணைவதற்குக் தூண்டுகோலாக இருந்தவர்.
மார்க்கச் சொற்பொழிவுகளைக் கேட்டு விட்டு அப்படியே களைந்து போன கூட்டத்தினரை தேள்விகள் கேட்க வைத்து, கேட்கப் பட்ட கேள்விகளுக்கு ஆதாரத்துடன் பதில் தந்து பாமரரையும் மார்க்க ஞானம் பெற்ற பண்டிதராக்கியவர்.
இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவமாகிய ஷிர்க்கிலிருந்து தம்மைக் காத்துக் கொண்டு உண்மை முஸ்லிம்களாக வாழ்வதற்குக் காரணமாக இருந்தவர்.
குர்ஆனும் ஹதீஸ் நூல்களும் அரபிக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்ற மெளலவிகளின் ஏகபோக சொத்து என்னும் நிலையை மாற்றி திருக்குர்ஆன் தமிழாக்கத்தையும் ஹதீஸ் நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்பையும் அனைவரும் படித்துப் பார்த்து உண்மை இஸ்லாத்தை உணர்ந்துக் கொள்ள வைத்தவர்.
இஸ்லாமிய சமூகத்தில் புரையோடிப் போன வரதட்சனை என்னும் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாநாடுகள் நடத்தி மக்களுக்கு உணர்த்தி மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
சமுதாயப் பேரியக்கங்களாகத் திகழ்ந்தவை எல்லாம் சரியானச் செயல் பாடுகள் இல்லாமல் மங்கி மறைந்துக் கொணடிருந்த கால கட்டத்தில் செயல் துடிப்புள்ள இளைஞர் பட்டாளத்தை உருவாக்கிச் சரியான பாதையை நோக்கிப் பயணிக்க வைத்தவர்.
பள்ளிவாசல்களின் நான்கு சுவர்களுக்குள்ளேயே அடங்கிப்போன மார்க்கச் சொற்பொழிவுகளை கடல் கடந்து வாழும் பல கோடி மக்கள் கேட்டுப் பயனடையும் விதத்தில் மீடியாக்கள மூலம் கொண்டு சென்றவர்.
சீர் கெடுக்கும் சீரியல்களில் மதி மயங்கிக் கிடந்த மக்களை மாற்றி ஈமானின் கிளைகள்இ நபிமார்கள் வரலாறு பிறப்பு முதல் இறப்பு வரை போன்ற மார்க்கத் தொடர் சொற் பொழிவுகளில் மக்களின் மனதைப் பறிகொடுக்க வைத்தவர்.
தரணியெங்கும் வாழும் தமிழ் பேசும் ஒவ்வொரு முஸ்லிமும் தன்நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும் 'இவர் யார்?'என்று..

6 comments:

அமத்துல்லாஹ் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

கட்டுரையின் ஆரம்பம் முதல் இறுதி வரை இவர் யார் என்று பெயரைக் குறிப்பிடாமலேயே கட்டுரையை படித்து முடித்தவர்களை பெயர் சொல்ல வைத்துவிட்டீர்கள்.

sshsoldstudents said...

This article is against the PJ's approaches. Because As a Muslim always do the Dawa only to satisfy Allah SWT. Even PJ doing correct activities, but follower doing not correct. Please consider my view...
Basheer from New Delhi

மஸ்தூக்கா said...

கட்டுரையில் இவர் யார் என்று பெயர் குறிப்பிடப் படவில்லை. இருந்தாலும் தாங்கள் புரிந்து கொண்டீர்கள். கண்ணை மூடிக் கொண்டு பீஜேயை பின்பற்றுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்களே. 'சொல்வது யார்?'என்று பார்க்காமல் 'சொல்வது என்ன? என்று மட்டுமே பார்க்கவேண்டும். குர்ஆன் ஹதீஸ் கொள்கைக்கு முரணாக பீஜே சொன்னாலும் நிராகரிக்க வேண்டும் எனும் மனப்பக்குவம் வரவேண்டும். இந்த மனப்பக்குவம் உள்ளவர் தான் உண்மையான தவ்ஹீத் வாதியாக இருக்க முடியும்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
கலீல் - கத்தார் said...

Dear Brother,

it is very true that because of PJ only most of people understand the real Islam , that is thawheed.
Allah choose him as a tool for that Dawa Work.

But these so called Sunnat Jamath ulamas(Porakithars) oppose him only for tha reason PJ is against their "Fathiha Business by cheating people with Shirk and BIdath.

விருப்ப மொழியில் குர்ஆன்