Jan 14, 2009

சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி? (பாடம்-2)

உங்களுக்கென சொந்தமாக ஒரு வலைப்பதிவு உருவாக்கியாகிவிட்டது. இதன் வடிவமைப்பை எப்படி அழகுபடுத்துவது? பக்கங்களை எப்படி ஒழுங்குபடுத்துவது? என்பதையெல்லாம் அறிவதற்கு முன் முதலில் வலைப்பதிவில் தமிழில் எப்படி ஆக்கங்களை பதிவது? என்பதை அறிந்து கொண்டால் தானே இவ்வளவு ஆசை ஆசையாக நாம் வலைப்பதிவைத் தொடங்கியதற்கே அர்த்தம் இருக்கும். எனவே முதலில் தமிழ் மொழியை எப்படி நம் கணிணியில் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்வோம்.
நூற்றுக் கணக்கான தமிழ் எழுத்துருக்கள் புழக்கத்தில் இருந்தாலும் நீங்கள் பயன்படுத்தும் எழுத்துரு (FONT) மற்றவரின் கணிணியில் இருந்தால் தான் அவர் உங்கள் ஆக்கங்களை படிக்க முடியும். இதற்கானத் தீர்வாக உருவாக்கப்பட்டது தான் யுனிகோட் என்னும் எழுத்துருவாக்கம். யுனிகோட் முறையில் நீஙகள் தட்டச்சு செய்தால் தான் எவ்வித தமிழ் எழுத்துருவும் இல்லாத கணணியிலும் உங்கள் பதிவுகளைப் பார்வையிட முடியும். பல்வேறு யுனிகோட் எழுத்துருக்கள் இருந்தாலும் தமழில் தட்டச்சு செய்வதற்கு பலரும் பயன்படுத்தும் இகலப்பை எழுத்துருவை உங்கள் கண்ணியில் டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள்.

பின் கீழ்கண்ட சுட்டியிலிருந்து கீபோர்டு Tamil unicode .kmx கோப்பை இறக்கம் செய்து அதை ஈகலப்பையில் பயன்படுத்துங்கள்

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=13

குழப்பமாய் இருக்கிறதா? இதோ படிப்படியாக செய்முறை உங்களுக்காக..

1.eKalappai-யை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவவும். சும்மா Install-யை கிளிக் பண்ணி மற்ற எல்லா வற்றையும் பட்பட்டென கிளிக்கி செல்லவும்.கீழே அந்த ஆரம்ப படம்.
2.eKalappai நிறுவி முடித்ததும் கீழே படத்தில் இடதுகோடியில் காண்பது போல புதிதாய் ஒரு ஐகான் (TavulteSoft Keyman 6.0) உங்கள் கணிணியில் வரும். 3.அந்த ஐகானை வலது கிளிக்செய்து keyman configuration...-ஐ கிளிக்கவும்.


4.அதிலுள்ள Install Keyboard-யை கிளிக்கி ஏற்கனவே இறக்கம் செய்து வைத்துள்ள NewUniTamil.kmx கோப்பை நிறுவவும் 5.முடிவில் இப்போது மூன்று கீபோடுகள் இருக்கும். அதில Tamil99UNI, Tamil99Tsc இரண்டிலும் உள்ள டிக் மார்க்கை நீக்கிவிடவும்.UniTamil மட்டும் டிக் இருக்கட்டும்.6.இப்போது Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் நீங்கள் தமிழில் எழுத தயார். Notepad-யை திறந்து தமிழில் எழுதலாம்.உதாரணமாய் அம்மா என்பதை ammaa எனவும் ஆசை என்பதை aasai எனவும் டைப்பவேண்டும். இதை Tamil Transliteration என்பார்கள். மீண்டும் Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் ஆங்கிலத்துக்கு போய் விடுவீர்கள்.
பையர்பாக்ஸ் -ல் தமிழ் ஒழுங்காக தெரிய மாட்டேங்குதே என்ன செய்ய?ஏற்கனவே நண்பர் இலக்கியன் சொல்லிய விளக்கத்தையே இங்கும் தருகின்றேன்.பயர்பொஸ் உலாவியில் தான் தமிழ் யுனிகோட் பிரச்சனை உள்ளது. அதனை கீழ் கண்டவாறு சீர் செய்யலாம்
1.முதலில் windows XP with Service pack 2 இறுவட்டை CD Drive க்குள் போட்டுக்கொள்ளவும். பின்னர் க்ண்ட்ரோல் பனெலிற்கு போய் Regional & Language Options என்னும் ஐக்கனை கிளிக் பண்ணவும்.
2. அதில் language என்னும் Tab இனை கிளிக் பண்னவும்.
3.அதில் supplemental language supportஏனும் option இல் இரண்டு தெரிவுகள் இருக்கும்
*. install files for complex scripts and right to left language (including Thai)
*install files for east Asian languages
இதில் முதலாவதை தெரிவு செய்த பின்பு apply button ஐ சொடுக்கினால் வின்டோஸ் எக்ஸ்பி சீடியிலிருந்து தமிழ் யுனிகோட்டுக்கு தேவையான விபரங்களை தானாகவே அது பதிவு செய்து கொள்ளும். பின்பு கணினியை மீள ஆரம்பிக்கவும்.
(தமிழ் யுனிகோட் எழுத்துருவை உங்கள் கணணியில் நிறுவும் இந்த எளிய வழிமுறை சகோதர பதிவர் முதுவை ஹிதாயத் அவர்களின் பதிவிலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டது.)
கணிணியில் தமிழில் எப்படி தட்டச்சு செய்வது என்பதை விளக்கமாக அறிந்து கொண்டிருப்பீர்கள். இனி அடுத்த பாடத்தில் வலைப்பதிவில் இடுகைகளை எப்படி இடுவது என்பதைப் பார்ப்போம்.
















0 comments:

விருப்ப மொழியில் குர்ஆன்