புதிய இடுகை என்பதை கிளிக் செய்தவுடன் உங்கள் வலைப்பதிவு புதிய இடுகையை இடுவதற்கு தயாரான நிலைக்கு தானாக வந்து விடும். இப்போது 3 ஆம் பாடத்தில் நாம் சொன்ன வழிமுறையைப் பின்பற்றி உங்கள் ஆக்கத்தை பதியுங்கள். அதாவது
முதலாவது வழிமுறையாகிய யுனிகோட் எழுத்துருவாகிய எ கலப்பை எழுத்துரு மூலம் நேரடியாக தட்டச்சு செய்யுங்கள். இப்படிச் செய்வதில் ஒரு பிரச்சினையும் உண்டு. நீங்கள் டயல்அப் இணையத் தொடாபாளராக இருந்தால் நீங்கள் தொடர்ந்து இணையத் தொடர்பில் இருக்கும்போது வீணாக நேரம் ஓடிக் கொண்டிருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில் இரண்டாவது வழிமுறையே சிறந்தது. ஏற்கனவே சாருகேசி, பாமினி போன்ற எழுத்துருக்களில் நீங்கள் தட்டச்சு செய்து வைத்துள்ள உங்கள் ஆக்கங்களை பாமினி2யுனிகோடு மாற்றி மூலம் மாற்றியமைத்து அதை அப்படியே காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்து விடலாம்.
முதலாவது வழிமுறையாகிய யுனிகோட் எழுத்துருவாகிய எ கலப்பை எழுத்துரு மூலம் நேரடியாக தட்டச்சு செய்யுங்கள். இப்படிச் செய்வதில் ஒரு பிரச்சினையும் உண்டு. நீங்கள் டயல்அப் இணையத் தொடாபாளராக இருந்தால் நீங்கள் தொடர்ந்து இணையத் தொடர்பில் இருக்கும்போது வீணாக நேரம் ஓடிக் கொண்டிருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில் இரண்டாவது வழிமுறையே சிறந்தது. ஏற்கனவே சாருகேசி, பாமினி போன்ற எழுத்துருக்களில் நீங்கள் தட்டச்சு செய்து வைத்துள்ள உங்கள் ஆக்கங்களை பாமினி2யுனிகோடு மாற்றி மூலம் மாற்றியமைத்து அதை அப்படியே காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்து விடலாம்.
அல்லது உங்கள் கணிணியில் FRONTPAGE நிறுவியிருந்தால் ஒரு பதிய பக்கத்தை திறந்து அதில் யுனிகோட் எழுத்துரு மூலம் தட்டச்சு செய்'து வைத்துக் கொண்டு அதை காப்பி செய்து பின்னர் இணையத் தொடர்பை ஏற்படுத்தி இந்த பக்கத்தில் பேஸ்ட் செய்து விடலாம். இதனால் இணையத் தொடர்பு நேரம் மிச்சப்படும்.
காலியாக உள்ள பெரிய கட்டத்தில் உங்கள் ஆக்கத்தை பதிந்து விட்டீர்கள். இந்தக் கட்டத்தின் தலைப்பில் உள்ள ஆப்ஷன்களைப் பயன்படுத்தி உங்கள் எழுத்துரு அளவை மாற்றிக் கொள்ளவும், அதைத் தொடர்ந்து அடாத்தி எழுத்தாக்கவும், சாய்வெழுத்தாக்கவும், எழுத்தக்களின் வணண்த்தை மாற்றவும் முடியும்.
உங்கள் மவுஸை அந்தந்த ஆப்ஷன்களுக்கு நகர்த்தும்போதே தமிழிலேயே அதன் விளக்கத்தைக் காணலாம். இதையெல்லாம் விளக்கத் தேவையில்லை உங்களுக்கே தெரியும். அதில் உள்ள இணைப்பு , படத்தைச்சேர், வீடியோவைச்சேர் போன்ற ஆப்ஷன்களைப் பற்றி பிறகு பார்ப்போம்.
தலைப்பு என்னும் இடத்தில் உங்கள் ஆக்கத்திற்கான தலைப்பை இட மறக்காதீர்கள். யுனிகோட் தமிழில் தான் தட்டச்சு செய்ய வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
பின்னர் பெரிய கட்டத்தின் அடிப்பகுதியில் உள்ள இந்த இடுகைக்கான லேபிள்கள் என்னும் கட்டத்தில் உங்கள் கட்டுரை எதைப்பற்றியது? என்பதை குறிப்பிடுங்கள். உதாரணமாக கல்வி பற்றிய கட்டுரை என்றால் கல்வி என தட்டச்சுங்கள். நீங்கள் பதியும் அடுத்த கட்டுரை ஆன்மீகம் பற்றியது எனில் அப்போது ஆன்மீகம் என்று லேபிள் பகுதியில் குறிப்பிடுங்கள். பிரிதொரு கட்டுரை கல்வி குறித்து நீங்கள் எழுதினால் அந்தக் கட்டுரையை பதியும்போது லேபிள் பகுதி கட்டத்தில் எல்லாம் காண்பி என்பதைக் கிளிக்கினால் இதுவரை நீங்கள் பதிந்துள்ள லேபிள்கள் பட்டியலை காட்டும் அதில் கல்வி என்பதை தேர்வு செய்தால் தானாக கட்ட்த்தை நிரப்பிக் கொள்ளும்.
இப்படி லேபிள்களை குறிப்பிடுவதால் உங்கள் வலைப்பதிவில் ஒவ்வொரு தலைப்பிலும் நீங்கள் எழுதியுள்ள கட்டுரைகள் அனைத்தையும் தலைப்பு வாரியாக அதுவே வரிசைப்படுத்தகி கொள்ளும். ஒவ்வொரு தலைப்பிலும் பதியப்பட்டுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையையும் காட்டும். வாசகர்கள் அந்தந்த தலைப்புகளை கிளிக் செய்தால் அந்த தலைப்பில் அதாவது அந்த லேபிளில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து ஆக்கங்களையும் ஓரிடத்தில் காணலாம்.
கட்டுரையை பதிந்து விட்டீர்கள், தலைப்பு கொடுத்துவிட்டீர்கள், லேபிள் தலைப்பு கொடுத்து விட்டீர்கள். இனி அடிப்பகுதியில் இடப்பக்கம் அமைந்துள்ள இடுகையை வெளியிடு என்பதை கிளிக்குங்கள். அவ்வளவு தான்
உங்கள் வலைப்பதிவு இடுகை வெற்றிகரமாக
வெளியிடப்பட்டது
ஆம் உங்கள் வலைப்பதிவின் முதல் இடுகை வெளியிடப்பட்டுவிட்டது. உங்கள் எழுத்துக்கள் இணையம் என்னும் வான்வெளியில் சிறகடித்து பறக்கத் தொடங்கி விட்டன. உலகின் எந்த மூலையில் எல்லாம் உங்கள் நண்பர்கள் இருக்கின்றனரோ அவர்களுக்கு உங்கள் வலைப்பதிவின் URL முகவரியைக் கொடுத்து இணையத்தைத் திறந்து பார்க்கச் சொல்லுங்கள்.
ஆம் உங்கள் வலைப்பதிவின் முதல் இடுகை வெளியிடப்பட்டுவிட்டது. உங்கள் எழுத்துக்கள் இணையம் என்னும் வான்வெளியில் சிறகடித்து பறக்கத் தொடங்கி விட்டன. உலகின் எந்த மூலையில் எல்லாம் உங்கள் நண்பர்கள் இருக்கின்றனரோ அவர்களுக்கு உங்கள் வலைப்பதிவின் URL முகவரியைக் கொடுத்து இணையத்தைத் திறந்து பார்க்கச் சொல்லுங்கள்.
நீங்கள் வெளியிட்ட இடுகையை நீங்கள் பார்க்க வேண்டாமா? பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டாமா? இப்போது
(ஒரு புதிய சாளரத்தில்)
வலைப்பதிவைப் பார்
என்பதை கிளிக் செய்யுங்கள். உங்கள் சொந்த வலைப்பதிவு உங்கள் சொந்த கட்டுரை அல்லது கவிதையுடன் உங்களைப் பரவசத்தில் ஆழ்த்தும். காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள். இன்று முதல் நீங்களும் ஒரு வலைப்பதிவர்.
வலைப்பதிவை வெளியிட்டு முடித்த பின் உங்கள் வலைப்பதிவை பார்வையிடும்போது ஆகா இதில் பிழை ஏற்பட்டுவிட்டதே என்ன செய்வது? கவலைப்படாதீர்கள் பிழையை உடனடியாகச் சரி செய்து விடலாம்.
இனி எப்போது இடுகைகளைத் திருத்துவதானாலும் புதிய இடுகைகளை இடுவதானாலும் உங்கள் வலைப்பதிவின் டாஷ்போர்டு பகுதிக்குச் செல்ல வேண்டும்.
ஏற்கனவே இதற்கு முந்தைய பாடத்தில் குறிப்பிட்டபடி வலைப்பதிவை தொடங்கவும் புதிய இடுகையை பதியவும்
https://www.blogger.com/start
என்னும் சுட்டியை கிளிக்கும்படியும் இதை உங்கள் FAVORITE பகுதியில் சேமித்து வைத்துக் கொள்ளும்படி குறிப்பிட்டிருந்தோம் அல்லவா,? அதன்படி சேமித்து வைத்துக் கொண்டீர்கள் தானே! இப்போது மேற்காணும் சுட்டியை கிளிக்குங்கள்.
திறக்கும் பக்கத்தில் கூகுள் கணக்கைப் பயன்படுத்தி உள் நுழைக என்று தெரிவிக்கிறதல்லவா? அப்புறமென்ன? உங்கள் gmail மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி உள் நுழையுங்கள். உங்கள் டாஷ்போர்டுக்கு இட்டுச் செல்லப்படுவீர்கள்.
புதிய இடுகையை இடுவதாக இருந்தால் புதிய இடுகை என்பதை கிளிக்குங்கள். ஏற்கனவே இட்ட இடுகையைத் திருத்த வேண்டும் என்றால் இடுகையைத் திருத்து என்பதை கிளிக்குங்கள். அவ்வளவு தான்.
இடுகைகைளத் திருத்தும் பக்கம் திறக்கும். அதில் நீங்கள் ஏற்கனவே வெளியிட்ட இடுகையின் தலைப்பும் அதற்கு முன் திருத்து, பார்க்க என்னும் இரண்டு ஆப்ஷன்களும் இருக்கும். திருத்து என்பதை கிளிக்குங்கள். திருத்த வேண்டிய இடுகை திறக்கும். செய்ய வேண்டிய திருத்தங்களைச் செய்து முடித்து விட்டு அடிப்பகுதியில் சிவப்பு அடையாளத்துடன் இடுகைகளை வெளியிடு என்பதை கிளிக் செய்ய மறக்காதீர்கள். இப்போது திருத்தத்துடன் உங்கள் இடுகை மீண்டும் வெளியிடப்பட்டு விட்டது.
இது வரை புதிய இடுகைகளை இடுவது பற்றியும், ஏற்கனவே இட்ட இடுகைகளைத் திருத்துவது பற்றியும் பார்த்தோம் இனி அடுத்த பாடத்தில் அமைப்புகள் மற்றும் தளவமைப்பு ஆகியவை குறித்து பார்க்கலாம்.
அன்புடன்
மஸ்தூக்கா
0 comments:
Post a Comment