Jan 18, 2009

சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி? (பாடம்-3)

வலைப்பதிவில் இடுகைகளைப் பதிய யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்தால் தான் அனைவரும் படிக்க முடியும் என்பதையும், பல்வேறு யுனிகோட் எழுத்துருக்களில் பரவலாகப் பலராலும் உபயோகப்படுத்தப்படும் எகலப்பை எழுத்துருவை எவ்வாறு பதிவிறக்கம் செய்து கணிணியில் நிறுவுவது என்பதைப் பார்த்தோம். இது முதலாவது வழிமுறை.

இது போக தமிழில் இடுகைளைப் பதிய வேறு சில வழிமுறைகளும் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்.
இரண்டாவது வழிமுறை.
உங்கள் கணிணியில் சாருகேசி, பாமினி போன்ற தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதும் அளவுக்கு உங்களுக்குத் தெரியும் என்றால் நீங்கள் தட்டச்சு செய்துள்ள உங்கள் ஆக்கங்களை அப்படியே copy செய்து கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கி கிடைக்கும் பக்கத்தில் பேஸ்ட் செய்து ENTER பட்டனைத் தட்டினால் உங்கள் ஆக்கம் இப்போது யுனிகோட் தமிழில் தயார்.

இரண்டாவது பெட்டியின் கீழ்ப்பகுதியில் உள்ள COPY என்பதை கிளிக்கினால் உங்கள் கட்டுரை யுனிகோட் வடிவில் காப்பி செய்யப்பட்டுவிட்டது. இதை அப்படியே உங்கள் வலைப்பதிவில் கொண்டுபோய் PASTE செய்து விடலாம்.

மூன்றாவது வழிமுறை

இதெல்லாம் நமக்கு ஒன்றுமே புரியவில்லை. இதை விட வேறு எளிய வழி உள்ளதா? என்று தானே கேட்கிறீர்கள்.. ஆம் உள்ளது. இன் கீழே உள்ள சுட்டியை கிளிக்குங்கள்

திறக்கும் பக்கத்தில் தங்கிலிஷில் தட்டச்சு செய்யுங்கள். அதென்ன தங்கிலிஷ்? தமிழ் வார்த்தைகளை இங்கிலிஷ் எழுத்துக்களைக் கொண்டு தட்டச்சுங்கள். அது தான் தங்கிலிஷ். உதாரணமாக AnbuLLa nanbar avargalukku Assalaamu alaikum என்று தட்டச்சு செய்து SPACE பட்டனைத் தட்டுங்கள் 'அன்புள்ள நண்பர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கிடைக்கும். இப்போது திருப்தி தானே!
அடுத்த பாடத்திற்கு போவோமா?
இனி வலைப்பதிவில் எப்படி ஆக்கங்களைப் பதிவது? என்பதைப் பார்ப்போம்.
-------------------------------------------------------------------
முதல் பாடத்தில், வலைப்பதிவைத் தொடங்க முதலில் கீழ்காணும் சுட்டியை கிளிக் செய்யும்படி சொன்னோம் அல்லவா? அதை இப்போது மறுபடியும் கிளிக்குங்கள்.
(திறந்த பின் இந்த முகவரியை உங்கள் FAVORITES பகுதியில் சேமித்துக் கொண்டால் அடிக்கடி நீங்கள் இடுகைகளை இடும்போது திறக்க வசதியாக இருக்கும்)

https://www.blogger.com/start

திறக்கும் பக்கத்தில் உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தி உள் நுழைக என்னும் இடத்தில் உங்கள் gmail மின்னஞச்ல் முகவரியையும் பாஸ்வேர்டையும் இட்டு உள் நுழைக என்பதை தட்டுங்கள் இப்போது உங்கள் வலைப்பதிவின் டேஷ்போர்டு பகுதிக்கு இட்டுச் செல்லப்படுவீர்கள்.

இந்த டாஷ்போர்டில் உங்கள் வலைப்பதிவு தொடங்கிய போது நீங்கள் பதிந்த வலைப்பதிவின் பெயரும் அத்துடன்
புதிய இடுகை, இடுகைகளைத் திருத்து, அமைப்பு, தளவமைப்பு, வலைப்பதிவைப்பார்

ஆகிய விபரங்களும் இருக்கும் இவற்றில் புதிய இடுகை என்பதை கிளிக்கவும் இப்போது உங்கள் வலைப்பதிவின் புதிய இடுகை இடும் பக்கம் திறக்கும். ஆம் புதிய இடுகை இடுவதற்கு நீங்கள் தயாராகிவிட்டீர்கள்

முதல் இடுகையை இடுவதற்கு உங்களுக்கு ஏற்படும் அவசரம் புரிகிறது. சற்று பொறுங்கள் அடுத்த பாடத்தில் சந்திப்போம். இன்ஷா அல்லாஹ்..
சந்தேகங்கள் எழுந்தால் தயக்கமின்றி எமது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்
masdooka@hotmail.com
அன்புடன் மஸ்தூக்கா





1 comments:

Raja said...

சொந்தமாக வலைப் பதிவு தொடங்குவது எப்படி? படித்து புதிய ப்ளாக் தொடங்கியுள்ளேன் . நன்றி...!
என் வலைபூ : http://kalasuvadugal.blogspot.com/

நன்றிகளுடன் ...
ராஜா

விருப்ப மொழியில் குர்ஆன்